என் மலர்
ஷாட்ஸ்
X
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
Byமாலை மலர்2 March 2023 9:53 AM IST (Updated: 2 March 2023 9:55 AM IST)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார்.
Next Story
×
X