என் மலர்
நீங்கள் தேடியது "அத்திவரதர்"
- திவ்ய தேசங்கள் வரிசையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
- திருவதிகையில் 9ம் நூற்றாண்டிலேயே “நகரத்தார் சபை” அமைத்து ஆலயத்திப்பணிகளை செய்தனர்.
1. மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார்.
2. பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.
3. இத்திருக்கோவிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
4. தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும்.
5. திவ்ய தேசங்களுள் கோவில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்.
6. திவ்ய தேசங்கள் வரிசையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம். முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
7. இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.
8. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.
9. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.
10. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.
11. கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.
12. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
13. வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.
14. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.
15. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.
16. பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
17. ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் 'தங்க மழை' கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.
18. வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன.
- புராணங்களில் இத்தலம் ஸத்யவ்ருத ஷேத்திரம் என்றே அறியப்படுகிறது.
- காஞ்சி மாநகர் சோழ பல்லவ ஆட்சி காலத்தில், நான்கு நகரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது
1. புராணங்களில் இத்தலம் ஸத்யவ்ருத ஷேத்திரம் என்றே அறியப்படுகிறது. இங்கு செய்யும் பாவ புண்ணியங்களுக்கு 100 மடங்கு பலன் என்பதாலேயே அப்பெயர்.
2. காஞ்சி மாநகர் சோழ பல்லவ ஆட்சி காலத்தில், நான்கு நகரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது: புத்த காஞ்சி, ஜைன காஞ்சி , சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி. காஞ்சிபுரத்தின் மையமான தேரடி வீதிக்கு தெற்கே விஷ்ணு காஞ்சியும், வடக்கே சிவ காஞ்சியும் அமைந்துள்ளன.
3. ப்ரம்மா யாகம் செய்தது, கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் இருக்கும் திருகுளத்து கரை மண்டபத்தில். சரஸ்வதி நதியின் சீற்றத்தை ஆதிசேஷன் ஆயிரம் தலை கொண்டு தடுத்ததால், அனந்த சரஸ் என்று பெயர்கொண்டது அந்த குளம்.
4. யாகத்தின் இறுதியில், யாக குண்டத்தில் தோன்றியவர் தான் தேவாதிராஜன் என்று இன்றும் வணங்கப்படும் உற்சவர். நெருப்பினால் உண்டான வடுக்களை இன்றும் ஸ்வாமியின் திருமுகம் தெளிவாக காணலாம்.
5. மற்ற எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத மகிமையாய், இங்கு இவர் ராஜாதி ராஜனாக ஆட்சி செய்கிறார். தேசத்தை ஆளும் மன்னருக்குண்டான அனைத்து சடங்குகளும் இவருக்கு உண்டு. பெருமாள் என்பதை விட ராஜன் என்றே அதிகம் கொண்டாடப்படுகிறார். பெருந்தேவி தாயார் பட்டமகிஷி.
6. பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான். 'கஜேந்திர மோட்ஷம்' காஞ்சி சாசனம்.
7. 'ப்ரம்மா' ஒவ்வொரு வருடமும் வந்து பூஜிக்கும் பத்து நாட்களும் 'ப்ரம்ம உட்சவமாக கொண்டாடப்படுவது தொடங்கியது இங்கே தான். 10 நாட்களுக்கான பூஜை முறைகள் ப்ரம்மா வகுத்த விதி. இதை பின்பற்றியே அனைத்து வைணவ கோவில்களிலும் இந்த உட்சவம் நடக்கிறது.
8. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் விசேஷமும் முதல் முதலில் தொடங்கியது இங்கே தான். காஞ்சி கருட சேவை என்பது உலகப்பிரசித்தம்.
9. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருப்பது போலவே, வேதாந்த தேசிகர் அவதரித்த 'தூப்புல்' என்ற தலமும் மிக அருகிலேயே உள்ளது.
10. 108 திவ்யா தேசங்களில் ஒன்றான பரமபதத்தை சேவிக்க முடியாது, ஏனெனில் அது பூலோகத்தில் இல்லை. ஆகவே வருடத்திற்கு ஒருமுறை, தேவாதிராஜன் பரமபத நாதனாக சேவை சாதிக்கிறான்.
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- இந்த ஆலயத்தில் நிறைய புராண-வரலாற்று சம்பவங்கள் நடந்துள்ளன.
1. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
2. இந்த ஆலயத்தில் நிறைய புராண-வரலாற்று சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த சம்பவங்களின் தொகுப்பு பல்வேறு வைணவ தலங்களில் விழாக்களாக மாறி உள்ளன.
3. இந்த தலத்துக்கு ஸ்ரீ விஷ்ணுசேத்திரம், ஸ்ரீவிஷ்ணு சாலை, ஹரி சேத்திரம், புண்ணியகோடி சேத்திரம், வைகுண்ட சேத்திரம், ஹஸ்தசைலசேத்திரம், திரீஷ்ரோத சேத்திரம், அத்திகிரி, ஹஸ்திகிரி என்று பல்வேறு பெயர்கள் உண்டு.
4. அர்த்தசாத்திரம் எழுதிய சாணக்கியர். திருக்குறள் எழுதிய பரிமேல்அழகர் ஆகியோர் இந்த தலத்தில் வழிபாடு செய்து அரிய பலன்களை பெற்றார்கள்.
5. வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம் போக மண்டபம் என்றும், திருப்பதி பூ மண்டபம் என்றும், நாராயணபுரம் ஞான மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு தியாகம் செய்ததால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் தியாக மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
6. ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ வித்தையை உபதேசித்தது இந்த தலத்தில்தான். சக்தி பீடங்களில் இந்த ஆலயம் ஸ்ரீ சக்கர பீடம் என்று அழைக்கப்படுகிறது.
7. முக்தி தரும் ஏழு நகரங்களில் முதன்மையான நகரமாக காஞ்சிபுரம் கருதப்படுகிறது. அதுபோல பஞ்சமூர்த்தி தலங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் பெயர் பெற்றுள்ளது. மற்ற ஆலயங்கள் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக் கேணி, நாராயணபுரம்.
8. காஞ்சிபுரம் இட்லி என்பது அந்த காலத்திலேயே புராணங் களில் புகழ் பெற்றதாக இருந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வந்த மாறனுக்கு இந்த தலத்தில் இட்லி வழங்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.
9. மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார்.
10. பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார் இத்திருக்கோவிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
11. தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும்.
12. திவ்ய தேசங்களுள் கோவில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோவில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்.
13. திவ்ய தேசங்கள் வரிசையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம். முப்பதோராவது திவ்ய தேசமாகும்.
14. இக்கோவில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோவில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது.
15. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன.
16. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.
17. மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோவிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார்.
18. கோவில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.
19. திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.
20. வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.
21. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.
22. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.
23. பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
24. ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் 'தங்க மழை' கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.
25. வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன.
- ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீ ராமானுஜரிடம் வாதிட வந்தார்.
- திருக்கச்சி நம்பிகள் பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டம் (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார்.
ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீ ராமானுஜரிடம் வாதிட வந்தார்.
வரதராஜர் அவர் கனவில் தோன்றி, 'யாம் இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம்.
ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தைக் கொண்டு வாதிட்டு யக்ஞமூர்த்தியை வெல்வீராக!' என்று கூறினார்.
ராமானுஜர் நடந்து வருவதைக் கண்டு பதறிய யக்ஞமூர்த்தி, ராமானுஜரின் கால்களில் விழுந்து தங்களின் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
ராமானுஜரும் காஞ்சி வரதராஜரின் அனுக்கிரகத்தை எண்ணி மனதார வணங்கி, யக்ஞமூர்த்தியை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.
திருக்கச்சி நம்பிகள்
திருக்கச்சி நம்பிகள் பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டம் (விசிறி) கைங்கரியம் செய்து வந்தார்.
அவருடன் நேரடியாகப் பேசி வந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் தம்முடைய கட்டளைகளை அவர் மூலமாகவே ஸ்ரீராமானுஜருக்கு தெரிவித்து வந்தாராம்.
கூரத்தாழ்வார்
ராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார், 'ஸ்ரீவரதராஜ ஸ்தவம்' என்ற பாடலைப் பாடி கண்களைப் பெற்ற திருத்தலம்.
- அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர்.
- இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள்-சூரிய உதயத்தில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில், குடையின் கீழ் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீகாஞ்சி வரதர்.
அப்போது சில நிமிட நேரம் குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர்.
இதுவே தொட்டாச்சார்யர் சேவை எனப்படும்.
சோளிங்கபுரத்தில் வாழ்ந்தவர் தொட்டாச்சார்யர்.
இவர், ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தின்போது கருட சேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம்.
ஒருமுறை அவரால் காஞ்சிக்கு வர இயலவில்லை.
சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார்.
அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர்.
இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்.
முகம்மதியர் ஆதிக்கத்தின்போது காஞ்சி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் இருந்த உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பு கருதி, உடையார்பாளையம், ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பிற்காலத்தில் உடையார்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு உற்சவர் விக்கிரகங்களை எடுத்து வர, ஆத்தான் ஜீயர் என்ற பெரியவர், தோடர்மால் என்பவர் உதவினர்.
அவற்றில், எது காஞ்சி வரதர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, மூர்த்திகளின் திரு ஆடையை முகர்ந்து பார்த்த சலவைத் தொழிலாளி குங்குமப்பூ வாசனையை வைத்து காஞ்சி வரதரைக் கண்டுபிடித்தாராம்!
நவராத்திரி விழாவின்போது சலவைத் தொழிலாளி வம்சத்தவர்களுக்கு மாலை மரியாதைகள் அளிக்கப்படுகின்றன.
- 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாள் சந்நிதியை அடைகிறார்.
- காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோவிலுக்கு செல்வார்.
பொங்கல் அன்று இரவு 10 மணிக்கு பார்வேட்டைக்குக் கிளம்பும் காஞ்சி வரதராஜ பெருமாள், 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோவிலுக்கு செல்வார்.
அங்கு 'வனபோஜனம்' விழா சிறப்பாக நடந்து முடிந்ததும், மறு நாள் பகல் 12 மணியளவில் வரதர், 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்ம பெருமாள் சந்நிதியை அடைகிறார்.
பிறகு, அங்கிருந்து ஸ்ரீவரதராஜ பெருமாளும், ஸ்ரீபுரம் நரசிம்மரும் 'திருமுக்கூடல்' எனும் இடத்தில் உள்ள ஸ்ரீ நிவாசபெருமாள் கோவிலுக்குப் புறப்படுவர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கருடசேவை
இங்கு, கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி-விசாகம் (நம்மாழ்வார் திருநட்சத்திரம்)
பிரம்மோற்சவம், ஆனி-சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி-பௌர்ணமி கஜேந்திர மோட்சம்
ஆகிய வைபவங்களின்போது நடைபெறுகிறது.
- வைகாசி - பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி
- ஆடி - திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை,
சித்திரை - தமிழ் வருட பிறப்பு; திரு அவதார உற்சவம்; சித்ரா பௌர்ணமி, தோட்டோற்சவம்; ஸ்ரீராமநவமி; ஸ்ரீபாஷ்யகார சாற்று முறை; ஸ்ரீமதுரகவிகள் சாற்றுமுறை.
வைகாசி - பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி
ஆனி - கோடை உற்சவம்; கருட சேவை; ஸ்ரீபெரியாழ்வார் சாற்று முறை; ஸ்ரீவைனதேய ஜயந்தி; ஸ்ரீசுதர்சன ஜயந்தி; ஸ்ரீமந் நாதமுனிகள் சாற்று முறை; ஸ்ரீபேரருளாளன் ஜ்யேஷ்டாபிஷேகம்; ஸ்ரீபெருந்தேவியார் ஜ்யேஷ்டாபிஷேகம்
ஆடி - திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை,
ஆவணி - ஸ்ரீஜயந்தி,
புரட்டாசி - ஸ்ரீதூப்புல் தேசிகன் மங்களாசாஸனம்; திருக்கோவில் தேசிகன் சாற்று முறை; நவராத்திரி; விஜயதசமி பார்வேட்டை,
ஐப்பசி - தீபாவளி; ஸ்ரீசேனைநாதன் சாற்றுமுறை; ஸ்ரீபொய்கை ஆழ்வார் சாற்று முறை; ஸ்ரீபூதத்தாழ்வார் சாற்று முறை; ஸ்ரீபேயாழ்வார் சாற்று முறை; ஸ்ரீமணவாள முனிகள் சாற்றுமுறை,
கார்த்திகை-கைசிக புராண படனம்; பரணி தீபம்; திருக்கார்த்திகை; ஸ்ரீதிருப்பாணாழ்வார் சாற்று முறை; ஸ்ரீலக்ஷ்மிகுமார தாததேசிகன் சாற்றுமுறை,
மார்கழி - ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் சாற்று முறை; திருவத்யயன உற்சவம்; பகல் பத்து-ராப்பத்து வைபவம்; அனுஷ்டான குள உற்சவம்; ஆண்டாள் நீராட்டு உற்சவம்; போகி திருக்கல்யாணம்.
தை - சங்கராந்தி; சீவரம் பார் வேட்டை; தெப்போற்சவம்; தைப்பூசம்; ஸ்ரீதிருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை; வனபோஜன உற்சவம்; ரதசப்தமி உற்சவம்;
மாசி - தவனோற்சவம்,
பங்குனி - திருக்கல்யாணம், பல்லவோற்சவம்.
- வரதராஜ பெருமாளுக்கு சூட்டப்படும் தங்கக் கொண்டை பிரசித்திப் பெற்றது.
- இன்றும், இந்த ஆபரணத்தை கருட சேவையின்போது வரதருக்கு அணிவிப்பார்கள் என்றும் கூறுவர்.
வரதராஜ பெருமாளுக்கு சூட்டப்படும் தங்கக் கொண்டை பிரசித்திப் பெற்றது.
வெங்கடாத்ரி என்கிற வைணவர் காஞ்சிக்கு வந்தபோது ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு தங்கக் கொண்டை அளிக்க விரும்பினார்.
அதற்கான போதிய பணம் இல்லாததால் யாசகம் செய்து பொருள் சேர்த்தார்.
ஆபரணத்தின் நடுவில் பதிக்க வேண்டிய எமரால்ட் கற்களை, நகைத் தொழிலாளி தன் ஆசை நாயகியான நடன மாது ஒருத்தியிடம் கொடுத்து விட்டான்.
வெங்கடாத்ரி தஞ்சை சென்று, எமரால்டு கற்களைப் பெற்று வந்து ஆபரணம் செய்து முடித்து பெருமாளுக்கு அணிவித்தார் வெங்கடாத்ரி.
'அதைப் போன்ற ஆபரணங்களை பூதேவி- ஸ்ரீதேவி நாச்சியார்களுக்கும் அளிக்க வேண்டும்!' என கனவில் தோன்றி, பெருமாள் வேண்டிக் கொள்ள அவர்களுக்கும் விலை உயர்ந்த கொண்டைகளை அணிவித்தார் வெங்கடாத்ரி.
இவர் கவி பாடுவதிலும் வல்லவராம்.
ஆற்காடு யுத்தத்தின்போது நோய்வாய்ப்பட்ட ராபர்ட் கிளைவ், ஸ்ரீவரதரின் துளசி தீர்த்தம் பருகி, நோய் நீங்கப் பெற்றாராம்.
இதற்கு நன்றிக்கடனாக போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்போது, விலை உயர்ந்த மகர கண்டி (கழுத்தில் அணியும் ஆபரணம்) ஒன்றை வரதராஜருக்கு சமர்ப்பித்தாராம்.
ஒரு பிரம்மோற்சவத்தின்போது பெருமாளை தரிசித்த கிளைவ், ஸ்வாமியின் தெய்வீக தோற்றத்தில் மனமகிழ்ந்து, தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்கு அணிவித்து மகிழ்ந்தாராம்.
இன்றும், இந்த ஆபரணத்தை கருட சேவையின்போது வரதருக்கு அணிவிப்பார்கள் என்றும் கூறுவர்.
ஆங்கிலேய அதிகாரியான பிளேஸ் துரை என்பவர், ஸ்ரீவரதருக்கு தலையில் அணியும் தங்க ஆபரணத்தை அன்பளிப்பாகத் தந்து மகிழ்ந்தாராம்.
கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.
மொகலாயர் படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜர் (உற்சவமூர்த்தி), காஞ்சிக்கு அருகில் வந்தவாசி செல்லும்
பாதையில் 4 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் அடைக்கலம் புரிந்தார்.
ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது.
இதன் அடையாளமாக ஒவ்வொரு வருடம் சித்ரா பௌர்ணமி விழாவில் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி திரும்பும்போது செவிலிமேடு லட்சுமி நரசிம்மரை வலம் வந்து செல்கிறார்.
- காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து ‘ராம கிருஷ்ண’ அம்சத்துடன் விளங்குகிறார்.
- அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு 24 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றனவாம்.
கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீதேவராஜர்.
இவருக்கு தேவ பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், பேரருளாளன், தேவாதிராஜன், யக்ஞோத் பவர், கஜேந்திர வரதர், தேவராஜ ஸ்வாமி, மாணிக்க வரதன், பிரணதார்த்திஹரன் ஆகிய வேறு நாமங்களும் உண்டு.
திருவேங்கடத்தான்-ஸ்ரீகிருஷ்ணாம்சம் கொண்டவர். ஸ்ரீரங்கநாதர்- ஸ்ரீராமர் அம்சம் கொண்டவர்.
காஞ்சி வரதரோ இரண்டும் சேர்ந்து 'ராம கிருஷ்ண' அம்சத்துடன் விளங்குகிறார்.
சித்ரா பௌர்ணமி அன்று பிரம்மதேவன் இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.
இதையடுத்த 14 நாட்கள் மாலைக் கதிரவனின் கிரணங்கள் மூலவரின் திருப்பாதங்களைத் தழுவுமாறு கருவறை அமைக்கப்பட்டுள்ளது.
உண்மை வைணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகரது, 'அடைக்கலப் பத்து' என்ற பாசுரங்களை வெள்ளிப் பதக்கங்களில் பொறித்து ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர்.
தவிர, திருவத்தியூரன் மீது அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச் சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் வரதராஜ ந்யாஸ தசகம் உட்பட இன்னும் பல நூல்களையும் இயற்றியுள்ளார் வேதாந்த தேசிகர்.
எம்பெருமானை சேவிக்க உகந்த வேளை, உஷத் காலம் என்பர்.
அப்போது, 'திருப்பள்ளியெழும் பெருமாளின் கழுத்தில், பெருந்தேவி தாயார், வரதரை இறுக அணைத்து சயனித்திருந்ததால் பதிந்திருக்கும் பொன் வளையல்களின் தழும்புகள் காணப்படுமாம்.
இதனால் மலர்ச்சியுடன் திகழும் பெருமாளை இந்த வேளையில் தரிசிப்பது, மகத்தானது!' என்கிறார் வேதாந்த தேசிகர்.
- ‘மஹா தேவ்யை’ என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார்.
- இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார்.
தனிச் சந்நிதியில் பெருந்தேவி தாயார், கல்யாண கோடி விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி இரு தாமரை மலர்களை
ஏந்தி, அபய- வரத கரங்களுடன், பட்டாடை- அணிமணிகளுடன் பொன் மகுடம் தரித்து, அமர்ந்த கோலத்தில்
கருணை நாயகியாகக் காட்சி தருகிறார்.
'மஹா தேவ்யை' என்ற வாக்கியத்தையே திருநாமமாகக் கொண்டு பெருந்தேவி தாயார் எனப்படுகிறார்.
இவருக்கு அரித்ரா தேவி, மகாதேவி ஆகிய பெயர்களும் உண்டு.
திருமகள், பிருகு மகரிஷியின் புத்திர காமேஷ்டி யாகத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயாராக அவதரித்து, பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரை பூஜித்து வந்தாராம்.
அவருக்கு அருள் புரிய திருவுளம் கொண்டார் பெருமாள்.
அதன்படி- பரமசிவன், பிரம்மர், பிருகு மகரிஷி, காசிபர், கண்வர், காத்தியாயனர், ஹரிதர் முதலிய முனிவர்கள் மற்றும் தேவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெருந்தேவியின் கரம் பற்றினாராம் வரதராஜர்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார்.
பெருந்தேவி தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. எனவே தாயாரை, 'படிதாண்டாப் பத்தினி' என்பர்.