என் மலர்
நீங்கள் தேடியது "காளி"
- 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.
- வங்கதேச சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி இக்கோவிலுக்கு சென்றார்.
டாக்கா:
வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. நேற்று கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பின் மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
- முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.
சரபேஸ்வரருக்கு கும்ப கோணத்திற்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது.
திரிபுவன வீரபுரம் என்பதே இத் தலத்தின் பழைய பெயராகும்.
இப் பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
இப் பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.
இது மட்டுமின்றி விவவனம், திரிபுரவனம், தேவசேத்திரம் என்ற வேறு பல பெயர்களும் இத்தலத்திற்கு உள்ளன.
ஊரின் நடுவே கிழக்கு நோக்கி இக் கோவில் அமைந்துள்ளது. இதற்கு 3 முக்கிய வாசல்கள் இருக்கிறது.
அவைமட்டுமின்றி அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில் ஒன்றும், வட பகுதியில் ஒன்றும் ஆக 2 வாசல்கள் இருக்கின்றன.
முதல் கோபுரம் 7 நிலைகளுடனும், 2ம் கோபுரம் 3 நிலைகளுடனும் கூடிய வாசல்கள் அழகுபெற செய்கின்றன.
இக் கோவிலுக்கு 2 பிரகாரங்கள் இருக்கிறது.
அவற்றுள் முதல் திருச் சுற்றாலையில் திருச்சுற்று மாளிகை இருக்கிறது.
இம் முதல் திருச்சுற்றாலையில் நடுப்பகுதியில் நடுக்கந் தீர்த்த பெருமாள் எழுந்தருளி இருக்கிறார்.
கர்ப்ப கிரகத்தின் விமானம் தஞ்சை ராஜராஜேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் இவைகளின் விமானங்களை ஒத்தது ஆகும்.
இவ்விமானம் அறிவானந்த வடிவமானது என்று தலப்புராணம் கூறுகிறது.
முதல் சுற்றாலையின் வட பகுதியில் அம்பாள் கோவிலும், அதன் கீழ் பால் சரபேசர் கோவிலும் இருக்கிறது.
2ம் திருச்சுற்றாலையில் வசந்த மண்டபமும், யாக சாலையும் அமைந்திருக்கிறது.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் ஸ்ரீகம்பகரேசுவர்.
தமிழில் நடுக்கம் தீர்த்த பெருமான் என்பது பொருள்.
திருபுவன ஈச்சரமுடையாக தேவர் என்பது இக்கோவில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருப்பெயராகும்.
- திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
- ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.
நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.
நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.
அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம். ஸர்பரேஷ்வரர் ஹோமம். சரித்தியங்கர ஹோமம் நடைபெறும்.
கணபதி ஹோமத்தின் பலன்கள்
சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.
நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்
திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.
அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்
ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.
சர்பரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்
பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.
பிரத்தியங்கரா தேவி ஹோமத்தின் பலன்கள்
கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.
- இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.
பிரத்தியங்கரா தேவி வழிபாடு குறித்து சேலம் அன்னை உக்ரபிரத்தியங்கரா கோவில் அர்ச்சகர் பூபதி சிவாச்சாரியார் கூறிய தாவது:
இந்த கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆதிசக்தி அம்சமாகிய அன்னை ஸ்ரீ அதர்வண பத்ரகாளி.
இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தி யங்கரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.
இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.
இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.
அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.
இந்த தேவியின் மகிமை பற்றி புலிப்பாணி முனிவர் மிகவும் விமரிசையாக கூறியுள்ளார்.
இந்த தேவி ஸ்ரீதேவி எந்திரத்தின் உத்தரதிக்கில் இருப்பவர் இந்த தேவியின் அவதாரம் ஆயிரம் சிங்க முகங்களும் இரண்டாயிரம் கைகளும் கோரைபற்களும் நீல நிறம் உடையவளாகவும், ஆமை மாலையையும் கபால மாலையும் அணிந்து காட்சி தருபவள் அக்கினி சுவாலை கொண்டவள்.
சிம்ம வாகனத்தில் அமர்ந்து அஷ்ட நாகங்களையும் குடையாக கொண்ட இந்த தேவியின் பெயர் உக்ரகாளி அதர்வண பத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.
இந்த தேவியானவள் விர்பரேஸ்வரர் சக்தியில் இருந்து தோன்றியவள்.
இந்த தேவியானவள் தர்மம் காத்து அதர்மம் அழித்து இப்பூவுலகை காத்தருளுகிறாள்.
இந்த தேவியை மங்களம் தரும் மகா காளிதேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.
- இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள்.
- இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.
1.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழும் மஹா பிரத்யங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து, ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றியவள்.
2.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை விழுங்கி ஜெயித்தவள். இவளுக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு.
3. இவளே யந்தர, மந்திர, தந்திரங்களுக்கு அதிபதியான அதர்வண பத்ரகாளி ஆவாள்.
4. இவளது மந்திரத்தை "அங்கிரஸ்' "பிரத்திரயங்கிரஸ்' என்ற இரு ரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் அவர்களது பெயராலேயே "பிரத்யங்கிரா' என அழைக்கப்படுகிறாள். இவள் அனுமாரை காவலாக கொள்பவள்.
5. இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரத்யங்கிரா தேவிக்கு புதுச்சேரி அருகில் 72 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான உருவத்துடன் கூடிய கோயில் அமைந்துள்ளது.
6. மனத்தெளிவு, நோய்கள் குணமாதல், குடும்ப பிரச்னை தீர்தல், பைத்தியம் தெளிதல், விரைவில் திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத் தடை நீங்குதல், கைவிட்டுப்போன பணம் கிடைத்தல் போன்ற சகல விதமான தொல்லைகள் நீங்க இங்கு பிரார்த்திக்கலாம்.
7. நீல நிற ஆடைகள், சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை, பானகம், கிழங்குவகைகள், உளுந்த வடை, வெண்ணெய், திராட்சை ஜூஸ், ஏலக்காய், ஜாதிக்காய் மாலைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எள்ளுப்பூ, செந்தாமரை போன்ற மலர்களில் பிரத்யங்கிராவுக்கு அதிக விருப்பம்.
8. வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை. பிரத்யங்கிரா தேவிக்கு மிக மிக விருப்பமான இவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தலாம்.
9. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜைகள், தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை ஆகியவை பிரத்யங்கிராவுக்கு விருப்பமானவை.
10. இங்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசி வேளையில் பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகத்தில் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சும (கண்களுக்கு புலப்படாத) ரூபத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.
11. இந்த யாகத்தினால் நாம் நினைத்த காரியங்கள், நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அடையலாம்.
- ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
- எல்லாவற்றிலும் சரி, சமத்துவமான பாவம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.
சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அரசுனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது.
சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தை கொடுக்கும் ரகசியத்தை சொல்லி அனுப்பினார்.
பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார். பைரவரின் பத்னியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.
மங்கள் ரூபிணி :
ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.
எல்லாவற்றிலும் சரி, சமத்துவமான பாவம் ஏற்பட்டால் தான் ஞானத்தை அடைய முடியும்.
காளியை தாமஸீ என்கிறது தேவி மகாத்மியம்.
மோட்சம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது.
மோட்சம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை.
இவள் அருள் இருந்தால் உயிருள்ளபோதே மோட்ச நிலை கிடைக்கும்.
இதற்கு "உன்மனீ நிலை" என்பர்.
பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ நிலை எளிதில் ஏற்படும்.
- பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.
- எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.
நரசிம்மருக்கும், சரபருக்கும் இடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்ட போது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு எதிரியாகும்.
சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள்.
இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுந்தி விட்டாள்.
சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள்.
இவர்கள் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர்.
பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான்.
சரபமூர்த்தி நரசிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக "உக்ரா" என்று அழைக்கப்படுகிறாள்.
பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும்.
இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரியநிறம், நீள ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது.
தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான்.
இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்று விட்டால், அந்த ராமலட்சுமணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான்.
தன்னை உபாசிப்பவன் நல்லவனா, கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள்.
பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறுவேலை பார்த்தார்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள்.
எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும்.
- சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.
- அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..
கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரார் - பிரத்யங்கரா தேவி கோவில் ஒன்று சிறப்பாக அமைந்துள்ளது.
ஆலயத்தில் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூடையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது.
தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை,
எவருடைய கண்களும் எரிவதும் இல்லாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.
ஆலயத்துக்குள் அமர்ந்து உள்ள பிரத்தியங்கா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்தவாறு எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். முகம் சிங்கத்தினுடயது .
கழுத்திலோ மனித கபாலத்தில் கோர்த்த மாலைகள்.
தலை மீது படம் எடுத்து ஆடும் எழு தலை நாகம். பயங்கரமான தோற்றம். பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதி.
சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது.
சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள்.
அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் எட்டு பிரிவாக வகுத்திருக்கிறாகள்..
ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.
ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்யப்படுவது இல்லை. தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது.
ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதனால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை.
ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது.
ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது.
இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை.
இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம் ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன. -நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. -பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன.
நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது.
- சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.
- இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சென்னை, தாம்பரம், சேலையூர் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி ஆலயம்.
ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகள் சென்னை, ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள கந்தாஸ்ரமத்தில் இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைத்துள்ளார்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீபுவனேஸ்வரியும், சுவாமிநாதனும் எதிரெதிரே தனித்தனியாகக் கோவில் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களையடுத்து ஸ்ரீசரபேஸ்வரரும் ஸ்ரீபிரத்தியங்கிராவும் தனித்தனியே கோவில் கொண்டிருக்கின்றனர்.
இந்த நான்கு திருவடிகளுக்கும் மத்தியில் அழகான தியான மண்டபம் அமைந்துள்ளது.
அபய, வரத முத்திரைகள் தாங்கி பாசமும் அங்குசமும் தரித்தவளாக அன்பும் சாந்தமும் நிறைந்த திருமுகத்தினளாய் பேரழகுடன் வீற்றிருக்கிறாள் ஸ்ரீபுவனேஸ்வரி.
அகில உலகத்தையே ஆளும் அந்த நாயகியின் பக்கத்தில் முருகப்பெருமான் இடக்கையை ஊர்ஹஸ்தமாகவும் வலக்கரத்தில் தண்டூன்றியும் காட்சி தருகிறார்.
பறவை, விலங்கு, மனிதன் மூன்றும் கலந்த வடிவாய். தலையில் பிறை நிலா விளங்க மான், மழு, நாகம், தீ, இந்நான்கையும் ஏந்திய கரத்தினராய்க் காட்சி தருகிறார் ஸ்ரீசரபேஸ்வரர்.
இவர் ஸ்ரீநரசிம்மரின் ஆவேசத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபெருமானால் மேற்கொள்ளப்பட்ட திருவடிவம்.
சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.
இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உள்ள சிறப்பு அம்சம் இதுவாகும்
இந்தப் பிரத்தியங்கிரா தேவி டமருகம், பாசம், கபாலம், சூலம் நான்கையும் தரித்தவளாய் சிம்ம வாகனத்தில் அமர்ந்து ஒளிதரும் பெரு விழிகளும், தெற்றுப்பற்களும், கோரைப்பற்களும் துலங்க காட்சி தருகிறாள்.
தலைக்கு மேலே நாகம் குடையாய் கவிழ்ந்திருக்கிறது. பாதத்து அருகே காளியின் மந்திரத்தை வெளிப்படுத்திய அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் ஆகிய இரு முனிவர்களும் கைகூப்பித் தொழுகின்றனர்.
இந்த ஆலயத்தில் அரிய தரிசனங்களாக பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் தத்தாத்ரேயரின் வடிவங்கள் ஆகிய சிலைகள் காட்சி தருகின்றன.
அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா.
அதர்வணப் பத்ரகாளியும் இவளே. இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.
இந்தக் காளியை வழிபடும் எவரையும், யாரும் பகைப்பதோ, விரோதமாக்குவதோ கூடாது.
பிரத்தியங்கிரா தேவியை தியானிப்பவர்களிடம் பகைமை பாராட்டக்கூடாது.
அப்படி பக்தர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்கின்றாள் இந்தப் பிரத்தியங்கிரா தேவி.
- ஆடி மாதத்தில் மகப்பேறு, குழந்தை செல்வம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் செய்யப்படுகிறது.
- நீண்ட ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ்ஜெய யாகம், நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்க மகா சுதர்சன யாகம் செய்யப்படுகிறது.
ஆடி மாதத்தில் மகப்பேறு, குழந்தை செல்வம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம், நீண்ட ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ்ஜெய யாகம், நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்க மகா சுதர்சன யாகம், கல்வி, கலைத்துறை வளர்ச்சி அடைய ராஜமாதங்கி யாகம், பகையை வெல்ல மகாவராகி யாகம், செழிப்பான வாழ்வு பெற வனதுர்கா யாகம், அன்புடன் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ ஸ்ரீ சதசண்டீமகா யாகம் நடைபெறுகிறது.
யாகங்களில் கலந்து கொண்டு அதன் மூலம் நமக்கு தெய்வ பலன், ஆசி கிடைப்பதாக பல புராணங்களில் கூறி உள்ளதால் மேற்கண்ட யாகங்களில் கலந்து கொள்ள ஸ்ரீமகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு 24 மணி நேர அன்னதான ஏற்பாடுகளை ஸ்ரீமகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி தர்மஷேத்ரா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீமகா புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ள தம்பதிகள் மட்டுமே வரவேண்டும்.
- யாகம் முடிந்தவுடன் தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்படுகிறது.
சிவகங்கை மானாமதுரையில் உள்ள ஸ்ரீமகாபஞ்சமி பிரத்தியங்கரா தேவி கோவிலில் காலை 6 மணிக்கு மகாகணபதி யாகத்துடன் தொடங்கும் இந்த யாகம் இரவு 8 மணி வரை நோய், நொடியின்றி 100 வயதுடன் வாழ வேண்டி தன்வந்திரி யாகத்துடன் முடிவடைகிறது.
இந்த புத்திர காமேஷ்டி யாகத்தில் மகப்பேறு, குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து கலந்து கொண்டு புத்திர பாக்கியம் பெற்று உள்ளனர்.
ஸ்ரீமகா புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ள தம்பதிகள் மட்டுமே வரவேண்டும்.
யாகம் முடிந்தவுடன் தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த வெண்ணை பிரசாதத்தை குழந்தை போல் தவழும் கிருஷ்ணர் படம் முன்பு பூஜை செய்தபின் சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது என பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் உள்ள வேப்பமரத்தின் கீழ் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு தொட்டில் கட்டியும், இங்கு தரும் கூழ் பிரசாதத்தை சாப்பிட்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது.
குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பின் குண்டு முத்துமாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதமும் குண்டு முத்துமாரியம்மனுக்கு கூழ்காய்ச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
- அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன்,
தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார்.
அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்ற செய்விப்பது என்பது தான் போட்டி.
இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்ற செய்ய இயலவில்லை.
ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் இத்தலம் (திருவண்ணாமலை) முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.