என் மலர்
நீங்கள் தேடியது "கோபி"
- பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு திருவிளக்கேற்றி மக்கள் நலன் வேண்டியும், குடும்பம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு செய்தனர்.
பச்சைநாயகி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், திருவிளக்கு பூஜை நடைபெறும் இடத்தில் பச்சை நாயகி அம்மன் வளையல்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளித்த பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் கொளப்பலூர், காமராஜ் நகர், சிறுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பரிதாபங்கள் யூ டியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.
- வடமாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
பரிதாபங்கள் என்ற யூ டியூப் சேனல் ஆரம்பித்து நகைச்சுவையான பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றவர்கள் கோபி, சுதாகர். இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து இவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர்.
இந்த வீடியோ மிகவும் டிரெண்டானது. அதில், தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த சம்பளத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும் இருவரும் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர்.
சுதாகர் -கோபி
இந்நிலையில், ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது. இதனால், பிரபல யூ டியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் யூ டியூப் சேனலை தடை செய்து தமிழக அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வட மாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரபல யூடியூபர்களான பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் தான் காரணம் என்றும் அவர்களது சேனலை தடை செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
- அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.
அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபி:
கோபி ஆஞ்சநேயர் வீதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). நம்பியூர் தாலுகா அலுவலக ஊழியர்.
இவர் நேற்று பணிக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.
கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் வந்த கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதின.
இதில் ராபர்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் கொண்டு செல்லும் வழியில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேனை ஓட்டி வந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.