என் மலர்
நீங்கள் தேடியது "சயனைட்"
- கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்
ஆந்திரப் பிரதேச மாநிலம் தெனாலியில் 4 பேரை சயநைட் கலந்த பானத்தைக் குடிக்கவைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள் மூவர் தெனாலி பகுதியில் உள்ளவர்களைக் குறிவைத்து அவர்களிடம் சினேகமாகப் பேசி சயனைட் கலந்த குளிர்பானங்களைக் குடிக்க வைத்துள்ளனர்.
அதை குடித்தவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் பெறுமதியான பொருட்களைத் திருடிச்சென்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உயிர்பிழைத்தவர்கள் அளித்த புகாரில் பேரில் விசாரணை நடத்தி வந்த ஆந்திர போலீசார் தற்போது இவர்கள் மூவரை கைது செய்துள்ளனர் சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு சயனைட் சப்ளை செய்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மூவரில் 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடத்தில் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட 6 பேரை சயனைட் மூலம் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.