search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்குமார்"

    • இந்தப் படத்தை இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ளனர்.
    • சரத்குமாரின் 150வது படமாக தி ஸ்மைல் மேன் உருவாகி இருக்கிறது.

    சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கியுள்ளனர். இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "இந்தப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில் கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இது தான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள். ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி."

    "படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. குழுவினர் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். நல்ல முயற்சி. சுரேஷும் நானும் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இதை இயக்குநர்கள் வித்தியாசமாக எடுத்துள்ளனர். நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம்.
    • இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சியாம், பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்மைல் மேன்’.
    • ஸ்மைல் மேன் திரைப்படம் வரும் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சியாம், பிரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஸ்மைல் மேன்'. சரத்குமார் நடிக்கும் 150-வது படமான இந்த படத்தில் சிஜா ரோஸ் ,இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன் ,பேபி ஆழியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    வருகிற 27-ந்தேதி படம் திரைக்கு வருவதையொட்டி சென்னையில் நடந்த புரோமோஷன் விழாவில் சரத்குமார் பேசியதாவது:-

    நாம் எடுக்கிற படம் நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்று தான் எல்லோரும் படம் எடுப்பார்கள். யாரும் பிளாப் படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுப்பதில்லை.

    யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது தவறு. நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள் தேவையில்லை என்றால் கூத்தாடிகள் என்கின்றனர். நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.

    எனக்கு எப்போதும் வயசே ஆகாது. படத்தில் நடித்துள்ள ஆழியா வளர்ந்து என் படத்தில் ஹீரோயின் ஆக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இமயமலையில் இருக்கும் பாபாவிற்கு நான்காயிரம் வயசு. நான்காயிரம் வருஷம் பாபா இருக்கும்போது சரத்குமார் இருக்கக் கூடாதா. சூரியவம்சம் இரண்டாவது பாகம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அறிவிப்பார்.

    தேசிய விருது வாங்கும் அளவிற்கு என் மனைவியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்”
    • மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரைக்கதை வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பத்திவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். 'க்' படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அய்னா. J. ஜெய்காந்த் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாறன் செய்ய, புரொடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை ஸிங்க் சினிமா (SYNC CINEMA) செய்ய, மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ் AIM குழுவினர் செய்கின்றனர். விளம்பர டிசைன் பணிகளை அதின் ஒல்லூர் செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படைக் காரணம்.
    • பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வேலூரில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக உறுப்பினர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஒவ்வொரு நாளும் கொலை மற்றும் பாலியல் பலாத்கார செய்திகளைக் கண்டும் கேட்டுமே மக்கள் மனம் பாதிப்படைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு தொடர்ச்சியாக இங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஆழமான வேதனையை அளிக்கிறது.

    வேலூரில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற 13 வயது சிறுமி மது போதையில் இருந்த 3 நபர்களால் கல்குவாரிக்குத் தூக்கிச் செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, சம்பவம் நடந்த இடம் வேறு எல்லையில் வருவதாகக் கூறி அங்கும் இங்கும் சிறுமியின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஆறுதலையும் அளித்து இது போன்ற சூழலில் அவர்கள் பிற காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் சட்டரீதியான வழிகள் குறித்து சிந்திக்க வேண்டுமே அல்லாமல், துன்பத்தில் இருப்பவர்களை அலைக்கழிக்கக் கூடாது என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும்.

    பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படைக் காரணமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு மது விற்பனைக்கு உறுதியான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

    பெண்களின் சிரமங்களைக் குறைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய, வீட்டில் கழிவறைகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசு நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் இது போன்ற பகுதிகளில் இன்னும் கழிவறைகள் இல்லாதது ஏன் என்று விசாரிக்கப்பட வேண்டும்.

    பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்களுக்கு உடனடியான தீர்ப்பு வழங்கி,கடும் தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று நீதித்துறையிடம் பணிவான கோரிக்கையை முன் வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.
    • கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அவரது 150-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'தி ஸ்மைல் மேன்' என் பெயரிடப்பட்டுள்ளது.

    மெமரீஸ் படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் இப்படத்தை இயக்குகிறார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது. ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும், சான் லோகேஷ் படத்தொகுப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரியான சரத்குமார் மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை காட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். எதுவும் சாத்தியம்.
    • நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என விஜய் பேசி உள்ளார்.

    நடிகரும் மூத்த அரசியல்வாதியுமான சரத்குமார் கூறியதாவது:

    * விஜய் கூறியது போல் நானும் உச்சநடிகராக இருக்கும் பொழுது தான் அரசியலுக்கு வந்தேன்.

    * மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன். மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். எதுவும் சாத்தியம்.

    * நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என விஜய் பேசி உள்ளார்.

    * அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்த விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள கவர்னர் பதவியை எப்படி வேண்டாம் என சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    • வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமணம் நடைபெற்றது.
    • ரத்குமாரும் ராதிகாவும் தீபாவளி பரிசுகளை வரலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் வழங்கினர்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார்.

    இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது கணவரோடு தலை தீபாவளி கொண்டாடி உள்ளார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் சரத்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். சரத்குமாரும் ராதிகாவும் தீபாவளி பரிசுகளை வரலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் வழங்கினர்.

    இது தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்களை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல் முறை நடைமுறைப் படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன்.
    • அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம்.

    சென்னை:

    பா.ஜனதா நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல் முறை நடைமுறைப் படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன்.

    இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும், இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

    ஒவ்வொரு ஐந்தாறு மாத இடைவெளிகளில் ஏதாவது தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் காரணமாக மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்கள் நலன், நாட்டு நலன் என அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் செயல்முறை என்ற அடிப்படையில், போலி தகவல்களை நம்பாமல் மக்கள் சுயமாக சிந்தித்து தங்கள் கருத்துகளை கருத்து கேட்பின் போது பதிவு செய்து, கட்சிப்பாகு பாடின்றி மக்கள் இந்த தேர்தல் செயல்முறையை வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேற உளமார வாழ்த்துகிறேன்.
    • பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர்.

    சென்னை:

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதில் நடிகர் சரத்குமார் கூறியிருப்பதாவது:-

    பாஜக தலைவர் அண்ணாமலையின் நோக்கமும், குறிக்கோளும் இனிதே நிறைவேறி, வெற்றியோடும், மனநிறைவோடும் தாயகம் திரும்ப வேண்டுமென்று உளமார வாழ்த்துகிறேன்.

    பொறுப்புமிக்க, அதிகாரம் நிறைந்த அரசுப் பணியை உதறிவிட்டு தேசப்பணி ஆற்ற விரும்பியவர்.

    மூத்த நிர்வாகிகளை அரவணைத்து, மிகக் குறுகிய காலத்தில்,தமிழகத்தில் பாஜக எனும் கட்சியை முக்கிய எதிர்கட்சியாக அறியப்படச் செய்தவர்.

    இவைகள் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும், மக்கள் மனதிலும் மிக முக்கியமான இடத்தை இந்த இளம்வயதிலேயே ஈர்த்து வைத்திருப்பவர்.

    நேர்மையிலும், உழைப்பிலும், தன்னம்பிக்கையிலும், தேசப்பணியிலும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களது வெளிநாட்டுப் பயணமும், கல்வியும் வெற்றிகரமாக அமைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

    தமிழ் அன்னையை வணங்குவோம்!

    பாரத அன்னையை போற்றுவோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.
    • விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்தினர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் நிறுவன தலைவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த்-க்கு இன்று 72-வது பிறந்தநாள்.

    இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார்.

    அதில், ""இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

     


    இதோபோன்று நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், "நீங்காத நினைவுகளுடன், என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

    • அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.
    • அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

    பாஜக உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது.

    பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர் தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

    பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி.

    அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.

    இப்படிப்பட்டவர்களின் மனநிலை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும். கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று களமிறங்கி இருக்கும் நபர்கள் குற்றவாளிகளாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.

    உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவித்தால் தண்டனை உண்டு என்பது போல, தனிப்பட்ட சட்டவிதிகளில் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றங்கள் வரவேண்டும். அரசியல் தலைவர்களும்,சமூகத்தில் பொறுப்பான இடத்தில் இருப்பவர்களும் இதுபோன்ற போலியான சமூக ஊடகவாதிகளுக்கு எதிராகக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.

    இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நிம்மதியாக வாழ உரிமையுண்டு எனும் போது,அந்த அடிப்படை உரிமையை இது போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் லாபத்திற்காக பறித்துக்கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

    இனிமேலும் பொய்களைக் கூறி, கீழ்தரமாக விமர்சித்து தங்கள் எல்லையைக் கடக்கும் நபர்கள் சுய பரிசோதனைசெய்து தங்களைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் சட்டப் படியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எனது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் எல் முருகன் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். கடிதத்தின் நகலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் அனுப்பி வைக்க இருக்கிறேன். அனாவசியமாக தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

    ×