என் மலர்
நீங்கள் தேடியது "ஜோலார்பேட்டை"
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.
இதனால் பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் ஊராட்சி அலுவலக அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்ததை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என பேசிய கமலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட்ரோட்டில் இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாய் கழுத்தில் கமல் உருவ படத்தை தொங்கவிட்டிருந்தனர். மேலும் கமல் உருவ பொம்மையை எரித்தனர். கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியை தடைசெய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.
ஜோலார்பேட்டை:
அரக்கோணத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரெயில்கள் மூலம் ரேசன் அரிசி கடத்தபடுவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று இரவு சென்னை-மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளில் சீட்டுகளின் அடியிலும், கழிவறைகளிலும் சிறு, சிறு மூட்டைகளாக 34 மூட்டைகளில் 250 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை முக்கனூரை சேர்ந்தவர் சுரேஷ். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 20). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது திருமணமான 4 மாதத்துக்கு பிறகு வெளிநாடு சென்ற சுரேஷ் 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கார்த்திகா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கார்த்திகாவின் தந்தை வடிவேலு ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
போலீசார் கார்த்திகா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஜோலார்பேட்டையில் இருந்து மொரப்பூர் இடையேயான தண்டவாளம் பராமரிப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காக்கங்கரை என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதிகாரிகள் உடனடியாக அந்த மார்க்கமாக வந்த டாடா நகர் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ், சாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்பட 5 ரெயில்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியிலேயே நிறத்தப்பட்டது.
ரெயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்தனர்.
பின்னர் 5 ரெயில்களும் 1 மணி நேர காலதாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை கண்டு பிடித்து சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பல்லாண்டுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தென்னரசு (22) பட்டதாரி வாலிபர்.
இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை திருப்பத்தூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் அடுத்த திரியாலம் என்ற இடத்தில் வந்தபோது திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சென்ற தனியார் பஸ் தென்னரசு பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (60), ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர். இன்று காலை கன்னிகாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த எல்லப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் ஏலகிரியை சேர்ந்த பிரபு (32) என்பவரை கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அசோகன் (வயது 48). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.
அசோகன் தனது குடும்பத்துடன் இன்று காலை ஜோலார்பேட்டைக்கு பைக்கில் சென்றார். ஜோலார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் இருந்து 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் 3 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மலர்விழியை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மலர்விழி இறந்தார்.
அசோகன் அவரது மகள் ஆர்த்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஏலகிரி நிலாவூரை சேர்ந்தவர் பாபு (வயது 30). இவரது மனைவி செல்வி (27). இவர்கள் நேற்றிரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கோடியூர் என்ற இடத்தில் பைக் சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல்பஷித் (வயது 76). இவர் சம்பவத்தன்று புதூர் ரெயில்வே கேட்டினை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அப்துல்பஷித் மீது மோதியது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல் பஷித் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஜேலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் மசூதி பின்புற பகுதியை சேர்ந்தவர் சுக்காராம் மகன் அசோக் குமார் (வயது29). சென்னை தண்டையார்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு பைக்கில் ஜோலார்பேட்டையில் இருந்து ஆண்டியப்பனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு அசோக்குமார் சென்று கொண்டிருந்தார். பக்கிரிதக்கா மசூதி அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டையை சேர்ந்த குமரேசன் மகன் வினோத் (32) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய தெருவில் வசிப்பவர் ரஞ்சன் (வயது 67). ரெயில்வே ஒய்வுபெற்ற ஊழியர். இவர் நேற்று இரவு வீட்டின் கதவை லேசாக சாத்தி விட்டு குடும்பத்துடன் மாடியில் படுத்து தூங்கினார்.
அப்போது வீட்டினுள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 4 செல்போன்களை திருடிச் சென்று விட்டனர்.
மேலும் அடுத்தடுத்த வீடுகளான முகமது அலி என்பவர் வீட்டில் 3 செல்போனும், நாசர் என்பர் வீட்டில் 3 செல்போனும் உள்பட மொத்தம் 10 செல்போன்களை திருடிச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை செல்போன்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த 3 பேரும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்த வீடுகளில் செல்போன்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது.
பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே இளம்பெண் கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர கணவர் சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்ட இளம்பெண், கணவர் சக்திவேலுவுடன் செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது அவரது மனைவி வேறொரு வாலிபருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியா கிரிவலம் செல்வதை கண்டு திடுக்கிட்டார்.
அவர்களை பின் தொடர்ந்து சென்ற போது அவர்கள் புதுமண தம்பதிகள் போல நடந்து கொள்வதை கண்டு சந்தேகம், அடைந்து அவர்களை மறித்துள்ளார்.
அப்போது இளம்பெண்ணுடன் கிரிவலம் வந்தவர் அவரது பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்பதும் அவரை புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் இளம்பெண்ணின் காதல் திருவிளையாடல் வெளிச்சத்துக்கு வந்தது.
இளம்பெண் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்தார். இருவரும் வெவ்வேறு பிரினர் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இளம்பெண்ணை சாலை நகரில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க வைத்துள்ளனர்.
அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் ஜோடியாக கிரிவலம் வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.