search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க கொடிகள் மாயம்"

    • கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை ஒத்தக்கால் மண்டபம் 1-வது வார்டில் ஒரு பேக்கரிக்கு எதிரே தி.மு.க கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்த தி.மு.க கொடியை காணவில்லை. யாரோ சிலர் கொடியை மட்டும் அறுத்து தனியாக எடுத்து சென்றுள்ளனர்.

    இதேபோல் அதேபகுதியில் உள்ள 2-வது வார்டு கொடிக்கம்பத்திலும் கொடியை காணவில்லை. இதனைப்பார்த்த தி.மு.க நிர்வாகிகள் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடிகளை எடுத்து சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த வருகின்றனர்.

    இதேபோல், மதுக்கரை 7-வது வார்டு சீராபாளையம் ஜங்சன் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் 8-வது வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள கொடிக்கம்பத்தில் இருந்த தி.மு.க கொடிகளும் காணவில்லை.

    சிலர் கொடிகளை அறுத்து கயிறுடன் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் வெவ்வேறு இடங்களில் கொடிக்கம்பத்தில் பறந்த 4 தி.மு.க கொடிகள் மாயமான சம்பவம் கட்சியினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×