என் மலர்
நீங்கள் தேடியது "தேடுதல்"
- பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
- செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேல வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்னதாகவே முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று செல்வராசும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு வந்த அந்த தரப்பை சேர்ந்த கும்பலான பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பூமாலை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜ் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் ஒருவர் இரும்பு பைபால் செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத தகராறில் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடலூரில் கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயமானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் சாலக்கரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் சவுந்தர்யா (வயது 9). அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் இவரது மகள் தாமரைச்செல்வி (9). இவர்கள் 2 பேரும் தனது உறவினரான ரேணுகா என்பவருடன் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.
சம்பவத்தன்று இரவு ரேணுகா என்பவர் தூங்கி எழுந்து பார்த்தபோது மேற்கண்ட சவுந்தர்யா மற்றும் தாமரைச்செல்வி ஆகிய 2 பேரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவனாம் பட்டினம் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 சிறுமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.