என் மலர்
நீங்கள் தேடியது "நெப்போலியன்"
- திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன்,ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார்.
- டெல் கணேசன் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அடி எடுத்து வைக்கும் திரைப்படம் 'ட்ராப் சிட்டி'
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை 'டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார்.
அவரது அடுத்த படைப்பான 'டிராப் சிட்டி'யில், தமிழ் நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவை இதுவரை கண்டிராத பாத்திரத்தில் ஹாலிவுட்டுக்கு கணேசன் அறிமுகப்படுத்துகிறார். இதில் யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.
டெல் கணேசன் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அடி எடுத்து வைக்கும் 'ட்ராப் சிட்டி' படத்தில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே "ஜீஸி" ஜென்கின்ஸ், யோகி பாபு, நெப்போலியன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைத்துறையின் பின்னணியில் நல்லதொரு கருத்தை சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது.
சவாலான இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தை திரைப்படம் காட்டுகிறது. அழுத்தமான கதைசொல்லல் மற்றும் தேர்ந்த நடிகர்களின் பங்களிப்போடு உருவாகி வரும் 'ட்ராப் சிட்டி' பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
- நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் திரை உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நெப்போலியன். அரசியலில் ஈடுபட்டு மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.
நெப்போலியனுக்கு திருமணமாகி மனைவி ஜெயசுதா மற்றும் தனுஷ், குணால் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இயற்கை முறை சிகிச்சை பெற்றார்.
தனுசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.
திருநெல்வேலியை சேர்ந்த அக்சயா என்பவருடன் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோகால் மூலம் நடந்தது.
நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருகிறார்.
திருமண விழாவில் திரை உலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் நெப்போலியன் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார்.
- நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
நடிகர் நெப்போலியன் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களில் சுல்தான், அன்பறிவு மற்றும் வல்லவனுக்கும் வல்லவன் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் மகனின் சிகிச்சைகாக அங்கே தங்கியிருக்கும் நெப்போலியன் அங்கு விவசாயமும் செய்து வருகிறார்.
ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை என்பது சற்று யோசிக்கத்தான் வைக்கிறது. ஏற்கனவே 40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 கோடிகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் பலர் வாரிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர். மேலும், பல்வேறு நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் நெப்போலியன், நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடியை வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006ம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1 கோடி வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை நடிகர் சங்க கட்டிடம் எந்தவித தடங்களும் இல்லாமல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய்காந்த் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்.
- மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்.
90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 'கேப்டன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் நெப்போலியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..!
தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு நாங்கள் அதிற்ச்சியுற்றோம்..! மிகவும் வேதனையும் , வருத்தமும் அடைந்தோம்..!! அன்பு சகோதரி குஷ்பு அவர்களும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா அவர்களும் எனக்கு தொலைபேசியில் அழைத்து அண்ணன் விஐய்காந்த் அவர்களின் மறைவு குறித்து தகவல் சொன்னார்கள்…!!
இன்னும் அதிக நாள் இருந்து திரைப்படத் துறைக்கும், நமது நாட்டிற்கு நிறைய செய்யவேண்டிய ஒரு நல்ல நடிகரையும், ஒரு நல்ல தலைவரையும் நாம் இழந்துவிட்டோம்…! அவரோடு நான் பழகிய நாட்கள், அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள், நடிகர் சங்க அனுபவங்கள், நட்சத்திர இரவுகள் நடத்தி நிதி வசூல் செய்து நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடத்தை மீட்டெடுத்தல் என, எண்ணிலடங்காத செயல்களை எல்லாம் , அவருடன் , நண்பர் சரத்குமார் அவர்களும் , நானும் உடன் இருந்து கடினமாக உழைத்து , வெற்றி கண்டு கடந்து வந்த பாதைகளை எல்லாம் , எங்களால் என்றும் , எதையும் எங்கள் வாழ்நாளில் மறக்க இயலாது ..!
கடந்த ஆண்டு நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்த போது , அவரை சந்திக்க அனுமதி கேட்டு, அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து உடல் நலம் விசாரித்தது, மகிழ்வோடு பழைய நினைவுகளை எல்லாம் பேசி அவரை மகிழ்வித்தது , இன்றும் எனது மனதில் நேற்று நடந்தது போல இருக்கிறது…! வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நல்ல மனிதர்..!!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், அவரது நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…!! அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!! " என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம்.
நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து தெரிவித்த குஷ்பு, மீனா "கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, புதுநெல்லு புதுநாத்து" உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தர் நடிகர் நெப்போலியன். அரசியலிலும் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் கடந்த 2-ந்தேதி தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலர் செல்போன் மூலமும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை குஷ்பு, மீனா ஆகியோர் நெல்போலியனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தப்பதற்காக அமெரிக்கா சென்றனர். அவர்களை பார்த்ததும் நெப்போலியன் மகிழ்ச்சியில் கண் கலங்கினார்.
இதுபற்றி நடிகை குஷ்பு கூறியதாவது:-
திரை உலகில் நெப்போலியனுடன் நடித்த எட்டுப்பட்டி ராசா படமும் அதில் இடம் பெற்ற பாடலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அதேபோல் நெப்போலியன் பல படங்களில் வில்லனாக வருவார். ஆனால் அவரது குணம் நேர்மாறானது. அவருடைய நட்பு மிகவும் இனிமையானது. அதனால்தான் அவரது நட்புக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரிடம் சொல்லாமலே மணி விழாவில் கலந்து சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக நேரில் சென்றோம்.
எங்களை பார்த்து அவர் கண்கலங்கியதை பார்த்து நெகிழ்ந்து போனோம். இதுதான் அவர் எங்கள் மீது வைத்துள்ள அன்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார்.
- எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக இதை தொடங்கினேன். பின்னர் இது படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்தது. சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும்.
தி.மு.க.வில் கலைஞர் கருணாநிதி எனக்கு குரு ஆவார். அவரின் ஆசியுடன் தி.மு.க.காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
சினிமாவில் வாய்ப்பு வருகிறது. தவிர்த்து வருகிறேன். எனது சினிமா குருநாதர் பாரதிராஜா, கேப்டன் விஜயகாந்த் இருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்பதால் அவர்களை சந்தித்து பேச உள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கிடைத்தால் அவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு அமெரிக்கா திரும்புவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
- இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதையடுத்து இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். மேலும், அமெரிக்காவில் இருந்து "பொன்னியின் செல்வன்" மற்றும் "கோப்ரா" படங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களை சமீபத்தில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் - நெப்போலியன்
இந்நிலையில், நடிகர் நெப்போலியன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட நெப்போலியன், "ஆஸ்கார் நாயகன் திரு ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் நாஷ்வில்லில் நேற்று இரவு (ஆகஸ்ட் 9 ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..! அதே அன்பான உபசரிப்பு…!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..!
— Nepoleon Duraisamy (@actornepoleon) August 10, 2022
அதே அன்பான உபசரிப்பு…! pic.twitter.com/nX99qdWLt0