என் மலர்
நீங்கள் தேடியது "புதுக்கடை"
- குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில்
- பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது
நாகர்கோவில் : குழித்துறை கோட்டத்திற் குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, இரையுமன்துறை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன் துறை, புத்தன்துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம், சென்னித் தோட்டம், சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பால விளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய பகுதி களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.
- கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதி காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ராஜன் (வயது 35). இவர் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ளார். வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் றோஸ் மகன் ஆஷிக்றோஸ் ஆகியோர் அதே பகுதியில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆஷிக் றோசின் திருமண செலவுக்காக அனிஷ் தனது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆஷிக்றோசுக்கு கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார். இதையடுத்து பணம் வாங்க அனிஷ் மற்றும் அவர் மனைவி டெலிஷா என்பவருமாக சென்றனர். அங்கு பணம் கொடுக்காமல் ஆசிரியர் அனிஷை ஆஷிக் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சி செய்த அனிஷின் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் காயமடைந்த அனிஷ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜன்னல் கம்பி வழியாக புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
- ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே இனயம் கடற்கரை கிராமம் நடுத்தெரு பகுதி 13-வது அன்பியத்தை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 47).
இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்ப வத்தன்று இரவில் வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஜாண்சன் கையில் கிடந்த ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.
மேலும் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டி னுள் நுழைந்து திருடி யிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டுபோன பொருட்க ளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதி சாத்திர விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமரேசன் (51).இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொழிலாளியான குமரசேனுக்கு மதுப் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் அவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் வாங்கி, கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரேசன் அதே பகுதி பொற்றை என்ற இடத்தில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரே சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குன்னத்தூர் பகுதியில் இருந்து முஞ்சிறைக்கு செல்லும் சாலையில் விபத்து
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். மனைவி மேரி ராஜம் (வயது 72). சம்பவத்தன்று குன்னத்தூர் பகுதியில் இருந்து முஞ்சிறைக்கு செல்லும் சாலையில் மேரி ராஜம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மேரி ராஜம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
ஆனால் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது. இதையடுத்து மேரி ராஜத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மேரி ராஜம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக மேரி ராஜம் மகள் ஹெலன் மேரி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
- பொதுமக்கள் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்க ளான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக் கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக் கப்பட்டதை நேரில் பார்வை யிட்டது.
இன்னுயிர் காப்போம் நம் மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம். கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினருக்கு நில உரிமை ஆணை வழங்கி யது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது.
முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் பணியின்போது கால மானவர்களின் வாரிசுதா ரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இல வச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தட்டி கேட்டவருக்கு அடி-உதை
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே வெள்ளை யம்பலம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. சம்பவ தினம் இரவு இங்கு ஐரேனி புரம் எட்வின் ஜேக்கப் (வயது 32) என்பவர் பணி யில் இருந்துள்ளார்.
அப்போது முஞ்சிறை பகுதி ராஜு மகன் ரீகன், அவரது சகோதரர் ரெஜின், நெடுமானி வயலங்கரை பாபு மகன் மனோஜ் உள்பட 4 பேர் உடல் நிலை பாதித்த ரீகனின் தாயாரை மருந்து வாங்க அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்குள்ள நர்சு களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்ட எட்வின் ஜேக்கப்பை ரீகன், ரெஜின், பாபு உள்ளிட்ட 4 பேரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.
இது போன்று ரெஜின் அளித்துள்ள புகாரில் உடல் நிலை பாதித்த எனது தாயாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள பணியாளர் எட்வின் ஜேக்கப் மற்றும் மேலும் 3 பேர் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.
இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்துவிட்டு 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
கடந்த 7-ந்தேதி விஷ்ணு குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. வழக்கம்போல் 2 நாட்கள் கழித்து வந்து விடுவார் என குடும்பத்தினர் நினைத்து அவரை தேடவில்லை. ஆனால், 2 நாட்கள் கழித்தும் விஷ்ணு வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்சிறை அருகே ஓச்சவிளை பகுதியில் தோட்டத்தில் உள்ள குளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். அப்போது, அது மாயமான விஷ்ணு என்பது தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து வந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதையடுத்து போலீசார் விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு குளத் தில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- ஆசைப்பட்ட மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே தேங்காய்பட்டினம் அம்சி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஷெர்லின் (வயது 17).
இவர், கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிளஸ்-2 படிக்கும்போது மருத்துவ படிப்புக்கு ஷெர்லின் ஆசைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மதிப் பெண் குறைவாக இருந்ததால் மருத்துவ படிப்பு கிடைக்க வில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்ப தால் ஷெர்லின் வீட்டில் இருந்தார். மாலையில் அவரது தாயார் அந்த பகுதியில் நடந்த மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த போது மகளை காண வில்லை. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது ஷெர்லின் தூக்கில் பிணமாக தொங்கு வது தெரிய வந்தது. இதை பார்த்து அதி்ச்சி அடைந்த தாயார் கூச்சலிட்டார்.
பின்னர் இதுகுறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங் கிய ஷெர்லின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது.
- புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் அரசு அனுமதியின்றி அதிக அளவில் மண் கடத்துவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கடை அருகே மறுகண்டான்விளையில் அதிக அளவில் மண் எடுத்ததால் 3 வீடுகள் சேதமடைந்து, ஒரு வீடு இடிந்து விழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவ இடத்தை பத்மநாபபுரம் சப்- கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அனுமதியின்றி மண் கடத்தும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில் நேற்று புதுக்கடை போலீசார் தேங்காப்பட்டணம் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது பெரிய பள்ளி தெருவில் எந்த வித அரசு அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் மண் கடத்திய டெம்போ ஒன்றை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு யூனிட் மண் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. போலீசார் மண் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்து, டெம்போ ஓட்டுநர் பைங்குளம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 56) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு
- கொலைமிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிவு
கன்னியாகுமரி:
நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவர் குழித்துறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிகிறார்.
சம்பவ தினம் மார்த்தா ண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் துறைமுகம் வழியாக செல்லும் பஸ்ஸில் பணிபுரிந்துள்ளார். அப்போது தேங்காப்பட்டணம் பஸ்நிறுத்ததில் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த பெல்லஸ்பர் என்பவர் பஸ்சில் ஏறி முள்ளூர்துறை என்ற இடத்துக்கு டிக்கட் எடுத்துள்ளார்.
பஸ் அரையன்தோப்பு பகுதியில் செல்லும்போது பஸ்ஸை நிறுத்த கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பெல்லஸ்பர் ஓட்டுநர் இருக்கை சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜன் தேங்காப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின்பேரில் அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
இது போன்று பெல்லஸ்பர் அளித்துள்ள புகாரில் பஸ்ஸில் ஏறி, தேங்காப்பட்டணம் துறைமுகப்பகுதியில் இறங்க வேண்டும் என டிக்கட் எடுத்ததாகவும், குறிப்பிட்ட இடம் வந்ததும் நடத்துனர் விசில் அடித்தும், டிரைவர் நிறுத்தாமல் சென்றதாகவும், இதை கேட்டதால் டிரைவர், நடத்துனர் இருவரும் சேர்ந்து பெல்லஸ்பரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்தார். இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
- கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே ஓச்சவிளை பகுதியில் இருந்து அனுமதியின்றி களிமண் கடத்துவதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புக்காவல் ஆய்வாளர் ரெத்தினதாஸ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு டெம்போக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவற்றில் அரசு அனுமதியோ, உரிமமோ இல்லாமல் இரண்டு டன் வீதம் 4 டன் களிமண் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தியவர்கள் போலிசை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர்.
போலீசார் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.