என் மலர்
முகப்பு » மட்டி
நீங்கள் தேடியது "மட்டி"
பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மட்டி படத்தின் முன்னோட்டம்.
பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கும் படம் 'மட்டி' (Muddy). இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. குடும்பம், பகை, பழிவாங்கல், ஆக்ஷன், திகில் என்று பல வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.
'கே ஜி.எப்' படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன்' புகழ் ஆர்.பி.பாலா இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.
யுவன் கிருஷ்ணா, ரிதன், அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
×
X