என் மலர்
நீங்கள் தேடியது "மாநிலம்"
- வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அசாம், மணிப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் கரைப்புரண்டு ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலைவட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நில நடுகத்தினால் எந்த பாதிப்பும் மக்களுக்கோ பிற கட்டடங்களுக்கோ இதுவரை இல்லை.
- நாகர்கோவிலில் 2 நாட்கள் நடக்கிறது
- 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் வருகை தருகின்றனர்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை சிறப்பாக நடத்த 15-க்கும் மேற்பட்ட தேசிய நடுவர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் வருகை தருகின்றனர். போட்டியின் 2-ம் நாள் மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில பளுதூக்கும் சங்க தலைவர் பொன் ராபர்ட்சிங், பொதுச்செயலாளர் சண்முகவேல், குமரி மாவட்ட பளுதூக் கும் சங்கதலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பொன் சுந்தர்நாத் ஆகியோர் செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
- அய்யப்ப பக்தர்கள் ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
நாகர்கோவில்:
அகில பாரத அய்யப்ப சேவா சங்க கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சபரிமலை விழாக்கால அன்னதானம் வழங்கும் தொடக்கவிழா சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அய்யப்ப பக்தர்கள் ஓய்வு இல்லத்தில் மாவட்டத் தலைவர் மதுசூதன பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிமணி அறிமுக உரையாற்றினார். இவ்விழாவில் சபரிமலை விழாக்கால அன்னதானத்தை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அன்னதானத்தை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு வெளிமாநி லங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் புதிதாக ஓய்வு இல்லம் கட்டப்பட்டுள்ளது. இதில் வருகை தருகின்ற ஐயப்ப பக்தர்கள் தங்கலாம். மேலும் மூன்று நேரம் உணவு வழங்கும் வசதி, குடிநீர் வசதி உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்களுக்காக சிறந்த முறையில் பல்வேறு வசதிகளை செய்துள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கன்னியாகுமரி மாவட்ட யுனியன் பணிகளை பாராட்டுகிறேன்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கு உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாநில இணைச் செயலாளரும், மாவட்டசெயலாருமான ஆதிமணியை 9442164154 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
விழாவில் அய்யப்ப பக்தர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இதனை தளவாய்சு ந்தரம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
- கன்னியாகுமரியில் நடந்த மாநில மாநாட்டில் முடிவு
- 141 பேர் கொண்ட மாநில குழுவும் தேர்வு செய்யப்பட்டது
கன்னியாகுமரி:
சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில தலைவராக சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
சி.ஐ.டி.யு. வின் தமிழ் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. பின்னர் நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் சவுந்தரராஜன் மீண்டும் தலைவராகவும், சுகுமாறன் பொது செயலாளராகவும், மாலதி சிட்டிபாபு பொருளாளராகவும், உதவி பொது செயலாளர்களாக குமார், திருச்செல்வன், கண்ணன், ஆறுமுக நயினார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக சிங்காரவேலு, விஜயன், சந்தரன், கணேசன், உதயகுமார், கருப்பையன், கிருஷ்ணமூர்த்தி, பொன்முடி, தெய்வராஜ், சிங்காரன், ஜானகிராமன், மகாலட்சுமி, மகேந்திரன், டெய்சி, செண்பகம், ரங்கராஜன், ஐடா ஹெலன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயலாளர்களாக முத்துகுமார், ரசல், தங்க மோகனன், திருவேட்டை, ஜெயபால், ராஜேந்திரன், கோபிகுமார், ரங்கராஜ், பாலகிருஷ்ணன், நாகராசன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, தனலட்சுமி, குமார், சிவாஜி, ஸ்ரீதர், தேவமணி உட்பட 141 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
நிர்வாகிகளை அறிமுகம் செய்து சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.
- விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
- ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
திருப்பூர் :
இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரை அடுத்த கொடுவாயில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களில் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
அதேவேளையில், சென்னையில் கடந்த ஜூலை 31 ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கலை இலக்கிய முன்னணி மாநிலப் பொறுப்பாளா் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால், திராவிடர் கழகத்தின்ர கொடுத்த புகாரின் பேரில் தமிழக அரசு தனிப்படை அடைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளையை நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவித்துக் கொள்வது.இந்து தெய்வங்களை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.