search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைத்ரேயன்"

    • பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன்.
    • மைத்ரேயன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த மைத்ரேயன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

    இது தொடர்பாக அதிமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

    அதனை, கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலனை செய்து, டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., அவர்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    • பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தார். அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    மைத்ரேயன் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்தவர். 1991-ல் பா.ஜனதாவில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2000-ம் ஆண்டில் பா.ஜனதாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அதை தொடர்ந்து 2002 முதல் 2019 வரை டெலலி மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டார்.

    இப்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பா.ஜனதாவில் இணைந்து உள்ளார். அவர் பா.ஜனதாவில் இணைந்தது ஏன் என்பது பற்றி கூறியதாவது:-

    மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

    தமிழகத்தில் பா.ஜனதா தலைவராக அண்ணாமலை மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நானும் பா.ஜனதா பட்டாளத்தில் ஒருவராக இணைந்து செயலாற்ற உள்ளேன்.

    ஒரு கட்சியில் இருந்து விலகிய பிறகு அந்த கட்சியை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 2 வருடமாக எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. அதனாலேயே விலகினேன்.

    கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை வருகிற பாராளுமன்றத் தேர்தல் நிர்ணயிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெல்லி கட்சி அலுவலகத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யாக பதவி வகித்தவர் மைத்ரேயன்.
    • கடந்த ஆண்டு அக்டோபரில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் அருண் சிங் முன்னிலையில் மைத்ரேயன் இணைந்தார்.

    அப்போது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உடனிருந்தார்.

    நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தார்மீக ஆதரவு என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில் எதன் அடிப்படையில் ஆதரவு? என மைத்ரேயன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். #NoConfidenceMotion #MKStalin
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த தீர்மானத்தை அவையில் ஆதரிக்க முடியாது என்றாலும், திமுக தார்மீக ஆதவை அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள அதிமுக எம்.பி. மைத்ரேயன், “திமுகவிற்கு மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லை. அப்படி இருக்க எந்த அடிப்படையில் ஆதரவு? தார்மீக ஆதரவை எல்லாம் வாக்கெடுப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
    ×