என் மலர்
நீங்கள் தேடியது "விஷவாயு தாக்கி 3 பேர் பலி"
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.
இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்தது.

இந்நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியுள்ளது. #DMK #TNBypoll


ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஜி.கள்ளுப்பட்டியைச் சேர்ந்த தனபாண்டியம்மாள் (30) என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாருமதி (12), அக்ஷரா (11) ஆகிய மகள்களும் மோனிஷ் கண்ணன் (4) என்ற மகனும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த தன பாண்டியம்மாள் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மாயமானார்.
மனைவி மற்றும் குழந்தைகளை காணாமல் கணவர் குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தார். இது குறித்து தன பாண்டியம்மாளின் தந்தை தன சேகரனிடம் கேட்ட போது அவரும் இங்கு வரவில்லை என கூறினார்.
இதனையடுத்து தன சேகரன் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனபாண்டியம்மாள் மற்றும் 3 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 53) இவர் டிவிஎஸ் வீதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
நீதி மோகன் என்பவர் இவரது ஜவுளிக்கடையில் 18 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நீதி மோகனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து நீதி மோகனுக்கு ஈரோடு நாடார் மேடு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஈரோடு கனி மார்க்கெட்டில் ஒன்றாக இணைந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
பின்னர் நீதி மோகனுக்கும் சக்திவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் நீதி மோகனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசு சமரசம் பேசினார்.
இதனால் திருநாவுக்கரசர் மீது சக்திவேல் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்திவேல், கள்ளுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்த காதர் ஷெரிப் மற்றும் முஸ்தபா ஆகியோர் மூலபாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்றனர்.
அங்கு திருநாவுக்கரசின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘‘உன்னால்தான் எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும்’’ என்று கேட்டு மிரட்டினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதனால் பயந்து போன சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து திருநாவுக்கரசு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சக்திவேல், காதர் ஷெரிப், முஸ்தபா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள பாலகெங்கனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவருக்கு குழந்தை இல்லாததால். 2-வதாக அமராவதி (25) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு புனித்(6), சஞ்சய்(3), ராகுல் (10 மாதம்) என 3 ஆண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். வெங்கடேசுக்கும் 2-வது மனைவியான அமராவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில மன வேதனையடைந்த அமராவதி மகன்களுடன் தாய் வீடான செட்டிப்பல்லி கிராமத்திற்கு சென்று விட்டார்.

அப்போது நீ வராவிட்டால் மகன்களை அழைத்து செல்கிறேன் என வெங்கடேசன் கூறி விட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.
கங்காதரநெல்லூர் அருகே சென்ற போது மனைவி வராத ஆத்திரத்தில் இருந்த வெங்கடேசன் அங்குள்ள நீவா ஆற்றில் திடீரென 3 மகன்களையும் வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை அவ்வழியாக வந்த பொதுமக்கள் ஆற்றில் 3 குழந்தைகளின் உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கங்காதரநெல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

நியூயார்க்:
அமெரிக்காவில் நியூ ஓர்லன்ஸ் புறநகரில் பிரபலமான மது பார் உள்ளது. நேற்று அங்கு பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் 2 பேர் மது பாருக்குள் நுழைந்தனர். கோட்டுடன் தொப்பியுடன் கூடிய உடை அணிந்து இருந்தனர். அவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. மது பாரில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தனர். ஓடிச் சென்று மறைவிடங்களில் பதுங்கினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 2 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்கள் தவிர 7 பேருக்கும் குண்டு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் நியூ ஓர்லியன்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மர்ம நபர்கள் 10 பேரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே, முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #gunfiring

சிவகங்கை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக சென்ற டி.டிவி தினகரனுக்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை போன்ற சிவகங்கை மாவட்ட எல்கையில் இருந்து மாவட்ட முடிவு வரை பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன்கென்னடி மாவட்ட துணை செயலாளர் மேப்பல்ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சக்தி, இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரிமுருகன் வக்கீல் பிரிவு இணை செயலாளர் அன்பரசன் பாசறை இணைசெயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகிபாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தகாளை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்து, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, விவசாய பிரிவு இணை செயலாளர்அர்ச்சுணன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், நகர செயலாளர் அன்புமணி, தொகுதி செயலாளர் மகேஷ் மற்றும் நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.