search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "052 candidates did not appear for the exam"

    • 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) இன்று காலை தொடங்கியது.
    • சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது.


    சேலம்:


    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -4 பிரிவில் காலியாக உள்ள செயல் அலுவலா் நிலையில் உள்ள 36 பணியிடங்களுக்கு (குரூப் -8) இன்று காலை தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் 6 மையங்களில் காலை, மாலை இரு கட்டங்களாக தமிழ் தோ்வும், பொது அறிவுத் தோ்வு நடைபெற்றது.இதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக, இந்து சமய அறநிலையத் துறையில் கிரேடு -3 பிரிவில் காலியாக உள்ள 42 செயல் அலுவலா் பணியிடங்களுக்கு (குரூப் 7பி) நேற்று தேர்வு நடைபெற்றது. காலை 9.30 முதல் 12.30 வரையில் தமிழ் மொழித் தோ்வும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்து சமயம் சாா்ந்த பொது அறிவுத் தோ்வும் நடைபெற்றது.


    இந்த தேர்வு சேலம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது. இதில் 4387 பேருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2350 பேர் தேர்வு எழுதினர். 2,052 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    ×