என் மலர்
நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அழகனூரில் உள்ள எச்.வி.எச். பள்ளியில், 10-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில், கணித பாட தேர்வின்போது மாணவர்களுக்கு விடைத்தாளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்து காப்பியடிக்க உதவி உள்ளனர்.
ஆசிரியர்களே விடைகள் எழுதுவதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் எச்.வி.எச். பள்ளியின் துணை முதல்வர் மகதும், ஆசிரியர்கள் கபாசி, பாட்டீல், பாலையா ஆகியோர் விடைகளை எழுதி மாணவர்களுக்கு வினியோகித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர். #ExamIrregularities
சர்ரே அணி பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வில் ஜேக்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஜேக்ஸ் 25 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொழில்முறை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. தற்போது வில் ஜேக்ஸ் அதை முறியடித்துள்ளார்.
🎥Incredible! @Wjacks9 hits 102 from 25 balls for @surreycricket in a pre-season T10 against @lancscricket.
— Test Match Special (@bbctms) March 21, 2019
That’s 5 balls faster than @henrygayle who has the professional record of 30 balls playing in the @ipl in 2013. #bbccricketpic.twitter.com/eMgwfB9OhI
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு வழக்கம்போல் தனித்தனியாக 2 சான்றிதழ்கள் வழங்கப்படும். #CBSE #SSLC #Marksheet
34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்தது.
இதனால் இந்த மாகாணத்தில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் நாசமடைந்தன. அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்திலும் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், காணாமல்போன சிலரை தேடும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மாகாணத்தின் அரசு உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர். #Afghanfloods #Heratfloods
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உம்ரா பகுதியில் ஒரு ஜவுளி கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருபவர் திலீப்.
நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சென்று மதியம் உணவு சாப்பிட்டு விட்டு கடைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
வழியில் ரோட்டோரத்தில் பெரிய பை ஒன்று கிடப்பதை கண்டார். அந்த பையை எடுத்து திறந்து பார்த்த திலீப்புக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அந்த பைக்குள் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.
மொத்தம் 10 லட்சம் ரூபாய் அந்த பைக்குள் இருந்தது. அந்த பணப் பையை யாரோ தவற விட்டு இருக்கிறார்கள் என்பதை திலீப் உணர்ந்து கொண்டார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பது அவருக்கு உடனடியாக புரியவில்லை.
பணத்தை தவற விட்டவர் தேடி வரக்கூடும் என்ற எண்ணத்தில் சிறிது நேரம் அவர் அந்த பகுதியில் காத்து நின்றார். ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து பணப்பையுடன் அவர் தனது கடைக்கு சென்றார்.
அங்கிருந்த ஒரு ஊழியரிடம் அவர் ரோட்டு ஓரத்தில் கிடந்த பணப்பை பற்றி கூறினார். அதற்கு அந்த ஊழியர் 10 லட்சம் ரூபாயை நீயே வைத்துக்கொள் என்று யோசனை தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த திலீப், “உழைத்து சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும்” என்று கூறி விட்டு 10 லட்சம் ரூபாயை போலீஸ் நிலையத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது பணக்காரர் ஒருவர் அந்த பணத்தை தவற விட்டு இருப்பது தெரிந்தது. அவரை அடையாளம் கண்டுபிடித்த போலீசார் அவரை வரவழைத்தனர்.
அவரிடம் திலீப் 10 லட்சம் ரூபாயை ஒப்படைத்தார். பணத்தை தவறவிட்ட நபர் அது திரும்ப கிடைத்ததை நம்ப முடியாதபடி மகிழ்ச்சி அடைந்தார். அதோடு அவர் திலீப்பின் நேர்மையை பாராட்டி தனது பணப்பையில் இருந்து 1 லட்சம் ரூபாயை எடுத்து கொடுத்தார்.
இதற்கிடையே உம்ரா பகுதி நகைக்கடைக்காரர் ஒருவரும் திலீப் நேர்மையை பாராட்டி 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்தார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு திலீப்பின் நேர்மைக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்து இருப்பதாக போலீசார் பாராட்டி உள்ளனர். #10lakhs
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தாயார், மாணவியின் புத்தகப்பையை எடுத்து பார்த்தார். அப்போது பைக்குள் மஞ்சள் கயிறுடன் தாலி, மெட்டி இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது அந்த மாணவி, திருப்பூர் காலேஜ் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 22) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன்னை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று தாலி கட்டி திருமணம் செய்ததாகவும், அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் மனம் உடைந்த மாணவியின் தாயார், இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி 9-ம் வகுப்பு கோடை விடுமுறையில் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய தினேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தினேஷ், அந்த மாணவியை கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தினேசை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து , தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தினேஷ் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஏட்டு வனஜா ஆகியோர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமத்துவத்துக்கான இளைஞர்கள் (Youth for Equality) என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதுதவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டெஹ்சீன் பூனாவால்லா மற்றும் வேறு சில தொண்டு நிறுவனங்களும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னர் நடந்த விசாரணையின்போது 10 சதவீதம் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியது.
இவ்வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்னும் மனுதாரரின் புதிய கோரிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் மறுவிசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். #SC #10pcreservation #economicalweakersection
கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்துள்ள சேலையூர், சேப்ளாநத்தம், விணங்கேணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
பின்னர் அங்கிருந்து தங்களது ஊருக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அந்த பஸ்சை புவனகிரியை சேர்ந்த அசோகன் (வயது 54) என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கொஞ்சிக்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி அந்த வழியாக நெல் அறுவடை எந்திரத்தை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் அசோகன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பக்தர்கள் சேலையூரை சேர்ந்த அகிலன் (39), சேப்ளாநத்தத்தை சேர்ந்த மங்களலட்சுமி (47), விணங்கேணியை சேர்ந்த கஸ்தூரி (37), லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் தொட்டியூரை சேர்ந்த ராஜு (56), லாரி கிளீனர் செஞ்சியை சேர்ந்த திருஞானம் (32) ஆகியோர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். #tamilnews

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் அதே பகுதியில் நடைபெற்ற பா.ஜனதா மண்டல மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசினார். அதனை பாரதீய ஜனதா நிர்வாகி எச். ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
தமிழக சகோதர சகோதரிகளே உங்களுக்கு என்னுடைய வணக்கம். நீண்ட பல ஆண்டுகளான மதுரை தொன்மையான மதுரை மாநகருக்கு என் வணக்கம். மதுரை பல ஆண்டுகளாக தமிழ்ச்சங்கத்தின் இருப்பிடமாக இருந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தொன்மையான பாரம்பரியமான புனித தலமாக உள்ளது. இங்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நான் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.
நான் சற்றுமுன் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான முக்கியமான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இந்த எய்ம்ஸ் மருத்துவ திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அதற்காக என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையின் அம்சமாகவே இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 3 பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்குவது நமது நோக்கம். இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் முக்கியமான முன்முயற்சிகளை பற்றி நான் கூறினேன். நேரடியாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதோடு நோய்கள் வராமல் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அதன் முக்கியமான தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் மக்கள் திட்டமாக இன்று ஏற்பட்டு இருக்கிறது.
கிராமப்புறங்களில் சுகாதாரம் என்பது 2014-ல் 38 சதவீதமாக இருந்ததை இன்று 98 சதவீதமாக நாம் உயர்த்தி இருக்கிறோம். இந்த காலக்கட்டத்திற்கு உள்ளாக 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த 9 கோடி கழிவறைகளில் 47 லட்சம் கழிவறைகள் தமிழகத்திற்கு மட்டும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வை எளிதாக்குகின்ற நடவடிக்கைகளுக்கான முன்னேற்ற திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றோம். இந்த முன்னேற்றத்தின் பலன்கள் அனைத்தும் அனைத்து பகுதி மக்களுக் கும் சென்றடைய வேண்டும்.
அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு 21-ம் நூற்றாண்டின் தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பல்வேறு இணைப்பு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை, நீர்வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப இணைப்பு என்று அனைத்து துறைகளிலும் நாம் மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த 4½ ஆண்டுகளில் இதுவரை 35 ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரெயில்வே லைன்கள் விரைவுபடுத்தப்பட்டு இந்த 4½ ஆண்டுக்குள் அது 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களை நாம் விரைந்து செயல்படுத்திடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
அதேபோல ராமேசுவரம் - பாம்பன் இணைப்பானது 1964-ல் துண்டாடப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆகவேதான் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமேசுவரத்தையும், பாம்பனையும் தனுஷ்கோடியோடு இணைப்பதற்கான திட்டத்தை நாம் மேற்கொண்டு இருக்கிறோம். அதேபோல் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான விரைவு ரெயில் திட்டத்திற்காக தேஜஸ் ரெயில் மதுரை - சென்னை இடையே இயக்கப்பட உள்ளது. 10 ஸ்மார்ட் சிட்டி பணிகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே சிறந்த உள்கட்டமைப்பு வசதி, சிறந்த இணைப்பு திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்க அத்தியாவசியமானது. தமிழகம் நன்கு முன்னேறிய தொழில்வளம் நிறைந்த மாநிலங்களில் ஒன்று.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக மத்திய அரசின் முயற்சியில் தமிழகத்திற்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்ற மாநிலங்களில் தமிழகம் அனைவராலும் வந்து இங்கு தொழிற்சாலை அமைக்க மையமாக அமைய வேண்டும் என்பதுதான் நமது முயற்சி.
அதேபோல நம்முடைய குறிக்கோள் விண்வெளி ஆராய்ச்சி மையம் பாதுகாப்பு தொழில்களின் மையமாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதே. பொறியியல், டிசைன் உற்பத்தி போன்றவற்றை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறோம்.
தூத்துக்குடி துறைமுகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் பிரதான பாதையில் முதல் கப்பல் இயக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்திலே தென்னிந்தியாவில் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் முன்னேற்றப்படும். இதன் மூலமாக இப்பகுதியில் தொழில் முன்னேற்றத்திற்கு முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.