என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "10 percent reservation"
- 23 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 4 வருடம் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.
- அதன்பின் 25 சதவீதம் பேர் 15 ஆண்டு பணிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
சண்டிகர்:
அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் 23 வயது வரையிலான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 4 ஆண்டு பணிபுரிந்தபின் வெளியேறிவிடுவார்கள். அதன்பின் 15 ஆண்டுக்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இதற்கிடையே, அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர் கிடைக்காது எனக் கூறினர். ஆனால், மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசி வருகின்றனர்.
ஒருவேளை பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அக்னிவீர்களுக்கு மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக் காவலர், ஜெயில் வார்டன் மற்றும் எஸ்பிஓ போன்ற பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் என அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபரில் அரியானா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே, அக்னிபாத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த முன்னாள் அக்னிவீர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படையின் கான்ஸ்டபிள் வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
#WATCH | Haryana CM Nayab Singh Saini says "Agnipath scheme was implemented by PM Modi on 14th June 2022. Under this scheme, Agniveer is deployed in the Indian Army for 4 years. Our government will provide 10% horizontal reservation to Agniveers in Haryana in direct recruitment… pic.twitter.com/1WNxKLK65H
— ANI (@ANI) July 17, 2024
- எங்கள் கட்சியின் தேசிய கொள்கை 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் வேறுபட்டதாகவே உள்ளது.
- முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தே கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் காங்கிரஸ், 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தே கருத்துக்களை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சி 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்போம் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
எங்கள் கட்சியின் தேசிய கொள்கை 10 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் வேறுபட்டதாகவே உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டின் நீதிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் தமிழக காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பது என்று கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
"முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளிடம் சாதிப்பிரிவினையைக் கற்பித்துப் பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.
இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூக நீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையைப்போக்கும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள், சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.
சமூகநீதித் தத்துவத்தைக் காக்கத் தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்."
மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தின் முடிவில், தலைமைச் செயலாளர் இறையன்பு நன்றி கூறினார்.
அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டும் ஆதரவாக தீர்ப்பு அளித்திருப்பதை எப்படி நாம் சந்திக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் இருக்கின்ற கட்சிகளை அழைத்து கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் 10 கட்சிகள் கலந்து கொண்டிருக்கின்றன. எல்லா கட்சிகளுமே ஒத்த கருத்துக்களைதான் இந்த சமூக நீதிக்கு எதிர்ப்பான பொருளாதார அடிப்படை என்று சொல்லிக் கொண்டு இருக்கிற 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பாக நாம் முழுமையாக நீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்சியும் சீராய்வு மனு போட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு 10 கட்சிகளும் ஒத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த சீராய்வு மனு போடுகின்றபோது அதற்கு தேவை ஏற்படுகிறபோது தமிழக அரசும் அதற்கு ஆதரவாக இதில் ஈடுபடும்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கலந்து கொள்ளாதது எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் கூட அவர்கள் இதை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழக மக்களில் 90 சதவீதம் பேர் இந்த சமூக நீதி கொள்கையின்கீழ் வருகிறார்கள். பா.ஜனதாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்படுவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு, மன்மோகன்சிங் அரசின் முயற்சியே காரணம்.
- சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் தாமதம் செய்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத, பிற உயர் சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.
கடந்த மன்மோகன்சிங்கின் அரசு மேற்கொண்ட முயற்சியால் 2010 ஆம் ஆண்டு ஜூலையில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அறிக்கையை சின்ஹோ ஆணையம் சமர்ப்பித்தது. 2014ம் ஆண்டிற்குள் இதற்கான சட்ட திருத்த மசோதா தயாராகி விட்ட நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக தாம் இருந்தபோது, 2012ஆம் ஆண்டு, சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாதி ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-
பல நூற்றாண்டுகளாக சமுதாய ரீதியாக கொடுமைகளை அனுபவித்து வந்தவர்களை சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு முறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறை, மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுவிட்டது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் 1921-ம் ஆண்டில் முதல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேராதவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி 1922-ம் ஆண்டு மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுபோல பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதில், கல்விக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை எதிர்த்து செம்பகம் துரைராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் 1951-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், சாதி ரீதியான இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் எல்லாம் 50 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், 9 அட்டவணையில் திருத்தம் கொண்டுவந்து, தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை நடை முறையில் உள்ளது.
இந்த நிலையில், கல்வி, வேலை வாய்ப்புகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசியல் அமைப்புச் சட்டத்தில் 103-வது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவுகளை சேராத பொதுப்பிரிவினர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாதி ரீதியான இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே மீறுவதாகும்.
அதுவும், இந்த சட்டத்திருத்தம் அவசர கதியில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி சபை ஜனவரி 7-ந் தேதி கூடி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கிறது. மறுநாள் ஜனவரி 8-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், அதற்கு அடுத்தநாள் ஜனவரி 9-ந் தேதி மாநிலங்களவையிலும் இம்மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு எந்த ஒரு ஆய்வையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் யார்? என்பது இந்த சட்டத் திருத்தத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் 97 சதவீதத்தினர் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தை கொண்டிருப்பவர்கள். அப்படி பார்க்கப்போனால், இந்த இடஒதுக்கீடு யாருக்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளதை தெரிந்து இருந்தும், கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது. எனவே, இந்த புதிய சட்டத் திருத்தத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #DMK #MKStalin #ChennaiHighCourt
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின்மை காய்வதற்குள் “2019-20 கல்வி ஆண்டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்” என்று ஜெட் வேகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே அமைச்சரின் கீழ் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 15 சதவீத இட ஒதுக்கீடும், மலை வாழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடும் எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டு-வஞ்சிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பதவிகளில் எப்படி எல்லாம் முற்பட்ட சமுதாயத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆங்கில பத்திரிகையே செய்தி வெளியிட்டுள்ளது.
40 மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் 14.38 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் பேராசிரியரும், அசோசியேட் பேராசிரியரும் ஜீரோ சதவீதம்! பேராசிரியர் பதவியில் 3.47 சதவீதம் பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ வெறும் 0.7 சதவீதம். ஆனால் முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை 95.2 சத வீதம். அசோசியேட் பேராசிரியர்களின் எண்ணிக்கை 92.9 சதவீதம். உதவிப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 1.3 சதவீதம். இப்படி மத்தியப் பல்கலைக்கழகங்கள் அத்தனையும் முற்பட்டோர் சமுதாயத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு, சமூக நீதி அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மண்டல கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தும் மத்திய அரசு துறைகளில் அது “அனாதை” போல் விடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள 71 துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
ரெயில்வே துறையில் 8.05 சதவீதமும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் 8.42 சதவீதமும், மத்திய அமைச்சரவை செயலகத்தில் 9.26 சதவீதமும், நிதி அயோக்கில் 7.56 சதவீதமும், குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.56 சதவீதமும், துணை குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.69 சதவீதமும் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
இதுதவிர, மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 11.43 சதவீதமும், சி.ஏ.ஜி. அமைப்பில் 8.24 சதவீதமும் இடம் பெற்றுள்ளார்கள். மத்திய பல்கலைக்கழகங்களிலும் சரி, மத்திய அரசின் துறைகளிலும் சரி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளும் நிரப்பப்படவில்லை.
குறிப்பாக மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து 25 வருடங்களுக்கு மேலான பிறகும் அந்த சமுதாயத்தினரால் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் தங்களது உரிமையைப் பெற முடியவில்லை.
பறிக்கப்பட்டுள்ள இந்த சமூக நீதி பற்றி பிரதமர் நரேந்திர மோடி கண்டு கொள்ளவில்லை. முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க அவசரம் காட்டவில்லை. ஏன் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது துறையில் கூட மண்டல் கமிஷனை முழுமையாக அமல்படுத்த முயற்சிக்கவே இல்லை!
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு சமூக நீதிக் காவலரும், கலைஞரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தையே தகர்த்தெறியும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செயல்படுகிறது.
நாட்டில் பல்வேறு “பிளவு” பாதைகளை வகுக்க முற்பட்டு, அத்தனையிலும் தோற்றுவிட்ட நிலையில், “முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு” என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை! இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.
“வளர்ச்சி” என்ற மாய ஜாலத்தை காட்டி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்திருக்கிறார்.
“சமூக”த்திலும், “கல்வியிலும்” பின்தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக்கீட்டை “பொருளாதார இட ஒதுக்கீடாக” மாற்றி மிகப் பெரிய சதி வலையை தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயம் நிச்சயம் மறந்து விடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே தான் செய்த துரோகத்திற்கு பிராய சித்தமாக மத்திய அரசு துறைகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சென்றடைய எஞ்சியிருக்கின்ற நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகையில் மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று இந்தியாவின் “சமூக நீதித் தொட்டில்” எனக் கருதப்படும் தமிழகத்திலிருந்து தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #MKStalin #PMModi
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சமீபத்தில் நிறைவேறியது.
ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது
— P. Chidambaram (@PChidambaram_IN) January 11, 2019
பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது. ஏழைகளுக்கு உதவுவதை இலக்காகக் கொள்ளவில்லை. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கான சதித்திட்டம், அரசின் இந்த முடிவுக்கு பின்னால் ஒளிந்திருப்பதாக" கூறியுள்ளார். #parliament #10percentreservation #Arvindkejriwal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்