search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100"

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

    • கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.

    மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.

    தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • சேலம் மாநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் சராசரியாக 60 முதல் 70 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன.
    • முதல் முறையாக நடப்பாண்டில் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக, மாதந்தோறும் 100- க்கும் மேற்பட்ட சுகப்பிர சவங்கள் நடைபெற்று உள்ளன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகராட்சி பகுதிகளில் 16 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதந்தோறும் சராசரியாக 60 முதல் 70 சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் முறையாக நடப்பாண்டில் தொடர்ந்து, கடந்த 5 மாதங்களாக, மாதந்தோறும் 100- க்கும் மேற்பட்ட சுகப்பிர சவங்கள் நடைபெற்று உள்ளன.

    இதில் குறிப்பாக தாத காப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து அதிகளவில் சுகப்பிரசவங்கள் நடை பெற்று, மாநில அளவில் அந்த மருத்துவமனை தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மேலும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பம் குறித்து சந்தேகங்கள் மற்றும் விளக்கம், யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கருவுற்ற பெண்ணிற்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு , வலிப்பு நோய், ஆஸ்துமா, இதயப் பிரச்சினைகள், தைராய்டு, ரத்தம், நரம்பு கோளாறுகள் உள்ளிட்டவற்றை கண்டறிய ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    அரசின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.18,000 வரை பணம், தாய், சேய் நல பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் பெட்டகம் ஆகியன வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கர்ப்பிணிகள் நாளுக்கு நாள் ஆர்வத்துடன் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைக்காக வந்து கொண்டுள்ளனர்.

    ஒவ்வொரு கர்ப்பி ணிக்கும் தனிக்கவனம் செலுத்தி, ஆரம்பம் முதல் தொடர்ந்து கண்கா ணித்து வருவதால், பிரசவ

    காலத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் உடனுக்குடன் கண்டறி யப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான சுகப்பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாநகரில் கடந்த ஜூலை மாதத்தில் 104, ஆகஸ்ட் மாதத்தில் 138, செப்டம்பரில் 118, அக்டோபர் மாதத்தில் 114, நவம்பரில் 103 என மொத்தம் 577 சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன".

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் `100' படத்தின் விமர்சனம். #100TheMovie #Atharvaa #Hansika
    நாயகன் அதர்வா போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது காதலியான ஹன்சிகா டெலிகாலராக வேலை பார்க்கிறார். இதற்காகவே ஹன்சிகாவை கிண்டல் செய்து வருகிறார். 

    அதர்வாவின் நண்பர் மகேஷ் போலீஸ் வேலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ரவுடிகள் மற்றும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கனவோடு பணியில் சேரும் அதர்வாவிற்கு, அவசர உதவி எண்ணான 100-க்கு வரும் அழைப்புகளை எடுக்கும் டெலிகாலராக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.



    தொலைப்பேசியில் அவசர உதவிக்கு அழைப்பவர்களை காவல் நிலையத்திற்கு மாற்றாமல், தானே நேரில் சென்று உதவி செய்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், இறந்ததாக கருதப்படும் அதர்வாவிற்கு தெரிந்த பெண் ஒருவர் 100 நம்பரை அழைக்கிறார். அவருடன் பேசும் அதர்வா அதிர்ச்சியடைகிறார். மேலும் அந்த பெண் தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

    இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதை அறியும் அதர்வா, தன்னுடைய நண்பன் மகேஷ் இதில் ஈடுபட்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறார். 

    இறுதியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா? நண்பன் மகேஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவிற்கு அதிகமாக வேலை இல்லை. பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார்.

    நண்பராக வரும் மகேஷ் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.



    போலீஸ் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். அவசர எண்ணான 100 பற்றியும், அதன் பின் செயல்படுபவர்களை பற்றியும் விளக்கி இருக்கிறார் இயக்குனர். அதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

    த்ரில் காட்சிகளுக்கு ஏற்றவாறு வரும் சாம் சி.எஸ்-ன் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘100’ அவசரம். #100TheMovie #Atharvaa #Hansika #YogiBabu

    விஷால், ஜீவா, அதர்வா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீசில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    ஜெய் நடித்துள்ள நீயா 2 படம் மே 10-ந் தேதியான இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 24-ந் தேதிக்கு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்திற்கும் பிரச்சனை வந்தது. நேற்று வெளியாக வேண்டிய அந்த படம் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. 

    அதனை சரிசெய்து ஒருநாள் தள்ளி இன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் படம் தள்ளிப்போயுள்ளது. அதேபோல் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீசும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீவா நடித்துள்ள கீ படம் மட்டும் பிரச்சனைகளை கடந்து இன்று சற்று தாமதமாக ரிலீசானது. மேலும் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாகிறது.



    இந்த நிலையில், திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பார்த்த எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார்.

    மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர்.

    இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களுக்கும் வரவேற்பு பெறும்.

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடித்திற்கும் `100' படத்திற்கான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. #Atharvaa #Hansika
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

    ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குனர் இன்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், 100 திரைப்படம் நாளை (மே 10, 2019) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.



    ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika
    சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


    100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார். 

    ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `100' படத்தின் முன்னோட்டம். #100TheFilm #Atharvaa #Hansika
    ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `100'.

    இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு - ரூபன், கலை - உமேஷ் ஜே.குமார், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன் & அனுஷ்யா ஸ்வாமி, பாடல்கள் - விவேக், ஒலி வடிவமைப்பு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர், ஆடை வடிவமைப்பு - சாரா விஜயகுமார், தயாரிப்பு - காவியா வேணுகோபால், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன்.



    100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரம், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது.

    இந்த படம் மூலம் தான் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நடிகை ஹன்சிகா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். #100TheFilm #Atharvaa #Hansika

    100 படத்தின் டீசர்:

    சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika
    `டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக, அதர்வாவை வைத்து த்ரில்லர் படமொன்றை இயக்கியிருக்கிறார். `100' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 

    விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக இயக்குநர் சாம் ஆன்டன் தெரிவித்துள்ளார். விரைவில் ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை துவங்குவார் என்றும், அருமையான பாடல்களை கொடுத்துள்ள சாம்.சி.எஸ்.க்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 



    அதர்வா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `பூமராங்' அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. #Atharvaa #Hansika

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில், தெலுங்கு பக்க தலைகாட்டிய ஹன்சிகா நிதினுடன் 8 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த்திருக்கிறார். #Hansika
    தமிழில் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த குலேபகாவலி படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஹன்சிகா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை.

    விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள `துப்பாக்கி முனை' திரைப்படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார். அதுமட்டுமின்றி அதர்வாவுடன் `100' என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் வேறு எதுவும் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் தலைகாட்ட தொடங்கி உள்ளார்.

    நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கவுள்ளார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மூலம் ஹன்சிகா நிதின் கூட்டணி இரண்டாவது முறையாக இணையவுள்ளது.



    ஏற்கெனவே 2010-ஆம் ஆண்டு ஈஸ்வர ரெட்டி இயக்கத்தில் ‘சீதாராமுல கல்யாணம் லங்கலோ’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். #Hansika #Nitin

    அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டிருக்கிறார். #Atharvaa #Hansika #100TheMovie
    அதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’, ‘100’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் செம போத ஆகாத திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ‘100’ படத்தை `டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். 

    இதில் அதர்வாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். 



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. #Atharvaa #Hansika
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஹன்சிகா தற்போது படமின்றி தவித்து வரும் நிலையில், அடுத்ததாக அதர்வாவுடன் `100' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். #Atharvaa #Hansika
    விஜய், சூர்யாவுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த காலத்திலேயே, அப்போது வளரும் நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. ஆனால் இப்போது படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

    ஹன்சிகா புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதர்வாவை வைத்து `டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் `100' என்ற படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார்.



    100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இந்த படம் மூலம் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் ஹன்சிகா. #Atharvaa #Hansika

    ×