search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 day working scheme"

    • அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடன்குடி ஒன்றிய மாநாடு உடன்குடியில் நடைபெற்றது.
    • 100 நாள் வேலைக்கான சட்டகூலி ரூ.284 முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உடன்குடி:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடன்குடி ஒன்றிய மாநாடு உடன்குடியில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நேரு தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் பாலசிவிசங்கர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். பாண்டி வரவேற்று பேசினார்.

    இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உடன்குடி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் பேசினார். பிறகு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு தொகுப்புரை வழங்கி விவசாய தொழிலாளர் சங்கத்தின் உடன்குடி ஒன்றிய செயலாளர் கந்தசாமி பேசினார். மாநாட்டை நிறைவு செய்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவீந்திரன் பேசினார்.

    மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆதிநாராயணன், செயலாளராக கந்தசாமி, பொருளாளராக சக்திவேல், துணைத்தலைவராக பேச்சியம்மாள், துணைச் செயலாளராக நேரு உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

    மாநாட்டில் உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீரின் உப்பு நீர் தன்மையை மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலைக்கான சட்டகூலி ரூ.284 முழுமையாக வழங்கவும், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தவும், ஜெ.ஜெ.நகர் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க கோரியும், தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கவும், வீடு மற்றும் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவும், தண்டுபத்து பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தியும், பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆதிநாராயணன் நன்றி கூறினார். மாநாட்டில் உடன்குடி ஒன்றியம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×