என் மலர்
நீங்கள் தேடியது "'108' adisuttru"
- தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும் ஒன்று
- ஆடித்தபசு திருவிழாவின் போது சங்கரநாராயணசாமி கோவிலில் உள்ள பிரகாரத்தில் "108" சுற்று சுற்றினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சங்கரன்கோவில், ஆக.7-
தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும் ஒன்று. கோவிலில் கடந்த 31-ந்தேதி ஆடித்தவசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி, அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஆடித்தபசு திருவிழாவின் போது சங்கரநாராயணசாமி கோவிலில் உள்ள பிரகாரத்தில் "108" சுற்று சுற்றினால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதன்படி கொடி யேற்றத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் "108" முறை கோவிலை சுற்றி வருகின்றனர்.
இதில் சிலர் அன்ன நடையிட்டும் நொண்டியடித்தும், முழங்கால் இட்டும் 108 முறை சுற்றுகின்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நாளை (8-ந்தேதி) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான 10-ந்தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தவசு காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தவசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலை துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.