என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "10th and 12th"
- 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
- 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வெழுதிய 210 மாணவர்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 64 மாணவ மாணவிகளும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 113 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் மாணவன் கதிரவன் 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி கோபிகா 586 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவி சுவாதி மற்றும் சௌமியா ஆகிய இருவரும் 3 ம் இடமும் பிடித்துள்ளனர்.
இயற்பியலில் 4 பேர், வேதியியலில் ஒருவர், கணிதத்தில் 3 பேர், கணினி அறிவியலில் 3பேர், உயிரியலில் 5பேர், கணக்குப்பதிவியலில் 8 பேர், கணினி பயன்பாட்டியலில் ஒருவர், வணிகக்கணிதத்தில் 4பேர் மற்றும் வணிகவியலில் 7 பேர்ஆகிய 36 மாணவ மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வெழுதிய 135 மாணவ மாணவிகளில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 37மாணவ மாணவிகளும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 78 மாணவ மாணவிகளும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி அளவில் மாணவி யஷீதா தஷ்னீம் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி வைஷ்ணவி 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி மதுமிதா 485 மதிப்பெண்கள்பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
கணிதத்தில் 6 பேர், அறிவியலில் 7 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.
10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி மற்றும் பொருளாளர்ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர்சிவப்பிரியா மாதேஸ்வரன்மற்றும் முதல்வர்அனிதா ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
- தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
- இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டத்தில் 12984 மாணவர்களும், 12574 மாணவிகளும் என மொத்தம் 25558 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இதில் 9584 மாணவர்களும், 11183 மாணவிகளும் என மொத்தம் 20767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 73.81 சதவீதம் ஆகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9981 மாணவர்களும், 10669 மாணவிகளும் என ெமாத்தம் 20650 பேர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இதில் 8509 மாணவர்களும், 10076 மாணவிகளும் என ெமாத்தம் 18585 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதம் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்