என் மலர்
நீங்கள் தேடியது "12th exam"
- 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
- வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு ரூ. 1 லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்புகளை பெற்ற மாணவர்களுக்கு 27வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதி, அமர்ஜோதி கார்டனில் உள்ள திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்புகளை பெற்ற மாணவர்களுக்கு 27வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அறக்கட்டளை செயலாளர் துரைசாமி வரவேற்று பேசினார். தலைவர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கி பேசினார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி மற்றும் திருப்பூர் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் கடந்த 2021-22 ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 33 மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 3ஆயிரம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
திருப்பூர் பகுதி அளவில் முதலிடம் பெற்ற கொங்கு வேளாளர் பள்ளியின் சுதர்ஷிகா, இரண்டாமிடம் பெற்ற ஏ.வி.பி. ட்ரஸ்ட் பள்ளியின் ஹரிஷ் மற்றும் லிட்டில் பிளவர் பள்ளியின் தியா எம்.ராஜ் உள்ளிட்ட 33 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர் கையால் கல்வி ஊக்கத்தொகை பெற்றுச்சென்றனர். டிசெட்டின் பொருளாளர் தேவராஜன் நன்றி கூறினார். ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி, டிசெட்டின் நிறுவன உறுப்பினர்கள், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.