என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "12th Fail"
- அனுராக் பதக் எழுதிய புத்தகத்தின் திரை வடிவம்தான், 12th ஃபெயில்
- பத்திரிகை துறையை அனுபமா அவமானப்படுத்தி விட்டார் என்றார் கங்கனா
கடந்த 2023 அக்டோபர் மாதம் வெளியான இந்தி திரைப்படம், "12th ஃபெயில்" (12th Fail).
2019ல் அனுராக் பதக் என்பவர், மனோஜ் குமார் ஷர்மா எனும் இந்திய காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையை புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தின் திரை வடிவம்தான் 12th ஃபெயில்.
இத்திரைப்படத்தை பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கியிருந்தார்.
விது வினோத் சோப்ராவின் மனைவி அனுபமா ஒரு முன்னணி திரைப்பட விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிமல், சலார், டங்கி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டி போட்ட 12th ஃபெயில் திரைப்படம், ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த வெற்றி குறித்து விது வினோத் சோப்ரா தெரிவித்ததாவது:
இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயன்ற போது, ஓடிடி-யில் (OTT) மட்டுமே வெளியிடுமாறு அனைவரும் என்னை எச்சரித்தனர்.
என் மனைவி என்னை அச்சுறுத்தினார். இப்படத்தை யார் பார்ப்பார்கள் என என் மனைவியே கூறினார்.
ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்ததால் எங்கள் சொந்த பணத்திலேயே விளம்பரங்கள் செய்தேன். தொடக்கத்தில் இப்படத்திற்கு சிறிய வரவேற்புதான் கிடைத்தது. ஆனால், தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் பாருங்கள்.
இவ்வாறு இயக்குனர் கூறினார்.
அனுபமா குறித்து சோப்ரா வெளியிட்ட கருத்திற்கு பிரபல இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
நடிகை கங்கனா கூறியிருப்பதாவது:
திரைப்பட பத்திரிக்கையாளர் துறையையே அனுபமா அவமானப்படுத்துபவராக உள்ளார்.
புத்திசாலியான பெண்கள் மற்றும் இளவயது பெண்களை கண்டால் பொறாமைப்படுபவராகவும் உள்ளார்.
தனது கணவரை கண்டே அவர் பொறாமைப்படுகிறார். கணவரின் வளமையையும் புகழையும் கொண்டுதான் அனுபமா தற்போது அனுபவிக்கும் அனைத்தையும் அடைந்துள்ளார்.
பாலிவுட் இயக்குனரின் மனைவி எனும் அடையாளத்தை திரைப்பட துறையில் பிரபலமானவர்களின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயன்படுத்துகிறார்.
உண்மையான திறமைசாலிகளையும், சிறந்த திரைப்படங்களையும் வெறுத்து ஒதுக்கும் வதந்தி கும்பலுடன் இணைந்து செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Vidhu sir's wife @anupamachopra is a disgrace in the name of film journalist, she is not only xenophobic but also deeply jealous and insecure of younger and intelligent women, no wonder she is jealous of her own husband, on whose name and wealth she built her website and other… pic.twitter.com/u6SchlUehk
— Kangana Ranaut (@KanganaTeam) February 4, 2024
- 2005-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று நைனிடாலில் சப்-கலெக்டர் ஆனார்.
- யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவதற்கு டியூசன் வகுப்புகளுக்கு சென்ற போதுதான் அவர் மனோஜ்குமாரை சந்தித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான '12-த்' பெயில் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஐ.பி.எஸ். அதிகாரியான மனோஜ்குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை பொறுத்தவரை ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவதன் போராட்டத்தை மையமாக கொண்டு இருந்தது. இதனால் படம் உணர்ச்சிகரமாக இருந்தததோடு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரியான மனோஜ்குமார் சர்மா என்பவர் திருமணம் முடிந்த சில நாட்களில் என்ற குறிப்புடன் தனது மனைவி ஸ்ரத்தா ஜோஷியுடன் எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரது பதிவில், அதிகாரி மனோஜ் சர்மா அவரது வாழ்க்கை குறித்த பார்வையை பகிர்ந்துள்ளார். அவரது மனைவி ஸ்ரத்தா ஜோஷியும் இந்திய வருவாய் சேவைகள் அதிகாரி (ஐ.ஆர்.எஸ்) ஆவார். இவர் 2005-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று நைனிடாலில் சப்-கலெக்டர் ஆனார். பின்னர் யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 121-வது இடம் பெற்று இந்திய வருவாய் சேவைகள் அதிகாரி ஆனார். யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவதற்கு டியூசன் வகுப்புகளுக்கு சென்ற போதுதான் அவர் மனோஜ்குமாரை சந்தித்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணமாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்