என் மலர்
நீங்கள் தேடியது "144 தடை"
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 12-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய திருவிழா நாளை (10-ந்தேதி), நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் நடக்கிறது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதனால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுதவற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக விழாவுக்கு அழைத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், இறுதி சடங்கு ஊர்வலங்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக உரிய அனுமதி பெற்று நடைபெறும் தேர்தல் பிரசாரங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் கூடுதலாக சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.
பொன்னமராவதி:
தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை கண்டித்தும் அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பு குடிப்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்துநடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உறுதி அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பிறகு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர்.
பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கைது நடவடிக்கை மேற்கொள்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிரவில் மறியல் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்த 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறைப்பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை, நமண சமுத்திரம் உள்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது.
இதனால் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி, ஐ.ஜி.வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லட்சுமி (திருச்சி), லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்ட எஸ்.பி.க்கள் செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ், 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
அதில், ஏப்ரல்19-ந்தேதி முதல் 21-ந்தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்மூலம் ஒரே இடத்தில் 4பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே கலவரம் தொடர்பாக பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் யாரென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு பரப்பியவர்கள் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னமராவதி பகுதியில் நேற்று பல இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி பொன்னமராவதியில் இன்று பஸ்கள் ஓடவில்லை.
புதுக்கோட்டையிலும் பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஆலங்குடியிலும் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
144 தடை உத்தரவால் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆலங்குடி பகுதிக்கு வந்திருந்த பொது மக்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் ஆலங்குடி பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி, சிவகங்கை, திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு டவுன் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இன்று இரவுக்குள் பஸ்களை இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே நேற்றிரவு பொன்னமராவதி கட்டியா வயலில் 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். #PonnamaravathiViolence
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாகைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Puducherry
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அசாம், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாகலாந்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூர் மாநிலத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு சமூக அமைப்புகள் தனித்தனி குழுக்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் இம்பால் நகரில் உள்ள 4 பெண்கள் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்கள், பிரதான மார்க்கெட்டில் அமர்ந்து தர்ணா போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீடு திரும்ப மறுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு போராட்டம் தீவிரமடைந்திருப்பதால் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி விலகும், என மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியது குறிப்பிடத்தக்கது. #CitizenshipAmendmentBill #ManipurProtest
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை முதல் 11-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாலுகா அலங்காரத்தட்டு பகுதியில் நாளைமறுநாள்(வியாழக்கிழமை) தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. அன்றைய தினம், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்திடவும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 11-ந்தேதி காலை 6 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற பகுதிகளில் இருந்து விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் பொதுமக்கள் 5-க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஜோதி எடுத்து வருவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும், வாள், கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், கட்சி மற்றும் சமுதாய கொடிகள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக விழாவிற்கு கலந்து கொள்ள பொது மக்களை அழைத்து வருவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த தடை உத்தரவு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள். தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. இந்த நிகழ்ச்சியினை அமைதியான முறையில் நடத்திட மாவட்ட காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு உள்ள நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews
பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு சில தினங்களே உள்ள நிலையில் சபரிமலையில் பாதுகாப்பு கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது. #Sabarimala #Section144
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் ஐயப்ப பக்தர்கள் வருகையும் பாதியாக குறைந்தது.
மேலும் சபரிமலையில 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு இன்று ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நிலவும் போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் வருகை சற்று அதிகரித்து உள்ளது.
நேற்று ஒரேநாளில் 83 ஆயிரத்து 648 பக்தர்கள் சபரிமலை வருகை தந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகை தந்தனர். அவர்கள் 10 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த பிறகுதான் சாமி தரிசனம் செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.
வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலையில் கடந்த ஆண்டு மொத்தம் ரூ.356 கோடியே 60 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. இதே நாளில் ரூ.123 கோடியே 93 லட்சம் வருமானம் கிடைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை ரூ.72 கோடியே 2 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு காணிக்கை மூலம் மட்டும் ரூ.100 கோடி வருமானம் வந்திருந்தது. இது இந்த ஆண்டு ரூ.28 கோடியே 13 லட்சமாக குறைந்துள்ளது. சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை மற்றும் அப்பம் பிரசாதம் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துள்ளது.
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப தர்ம சேனை தலைவர் ராகுல் ஈஸ்வர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறை நடைபெற்றதால் ராகுல் ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பத்தினம் திட்டா போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர், கடந்த சனிக்கிழமை போலீஸ் நிலையத்தில் கையெழுந்து இடவில்லை. இதை தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்த கோர்ட்டு அவரை கைது செய்யவும், போலீசுக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து பாலக்காட்டில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். #Sabarimala
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கிய போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களில் 7 பேர் உயிர் இழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன. மேலும் இன்று (திங்கட்கிழமை) தலைநகர் ஸ்ரீநகரில் பதாமி பாக் என்கிற இடத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தை நோக்கி பொதுமக்கள் பேரணி நடத்தவும் அந்த அமைப்புகள் அறிவுறுத்தி உள்ளன. இதையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா மற்றும் ஸ்ரீநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் 2 மாவட்டங்களிலும் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. #SrinagarPulwama #Section144
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் 144 தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஐயப்ப பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடியை கைவிட வேண்டும் என்று கோரி கேரள சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல பா.ஜனதா சார்பில் கேரள அரசு தலைமை செயலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது. கேரள சட்டசபையிலும் இந்த பிரச்சினையை கிளப்பி எதிர்க்கட்சிகள், ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் இந்து அமைப்புகளும் 144 தடை உத்தரவை கைவிடக்கோரி போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று காங்கிரசின் இளைஞர் அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்ததால் பரபரப்பு நிலவியது. ஆனாலும் சபரிமலையில் 144 தடை உத்தரவை அரசு வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில் 6-வது முறையாக வருகிற 16-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பத்தனம் திட்டா கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. மண்டல பூஜைக்கு 2 வாரங்களே உள்ள நிலையிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே காணப்படுகிறது.
இதன் காரணமாக சபரிமலை கோவில் உண்டியல் வருமானம், பிரசாதங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை தொடர்ந்து குறைந்து வருகிறது. #Sabarimala #Section144
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.
இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக தற்போது கோவில் நடை திறந்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் இதுபோன்ற போலீஸ் கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகையும் இந்த ஆண்டு குறைந்து உள்ளது.
சபரிமலையில் 144 தடை உத்தரவை பத்தனம்திட்டா கலெக்டர் நீடிப்பு செய்து அறிவித்து வருகிறார். அதன்படி இன்று முதல் 8-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. 4-வது முறையாக இந்த நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தடை உத்தரவு இளவங்கல் முதல் சன்னிதானம் வரை அமலில் இருக்கும். அதே சமயம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் சரணகோஷம் எழுப்பவோ, நாமஜெபம் நடத்தவோ தடை இல்லை.
இந்த 3 பேர் குழு வருகிற 10-ந்தேதிக்குள் தங்களது அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், பக்தர்களிடம் போலீசாரின் கெடுபிடியை கண்டித்தும் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கேரள தலைமை செயலகம் முன்பு இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். பா.ஜனதா எம்.பி. சுரேஷ்கோபி, ஓ.ராஜ கோபால் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதே கோரிக்கைக்காக காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்களை முதல்-மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது போராட்டத்தை கைவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். #Sabarimala #Section144