search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16வது மக்களவை"

    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வாத்தியார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் அந்த சிறுமியை காதலித்து வந்தார். இதன்காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

    அந்த சிறுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் சிறுமியின் கணவர் ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமி குழந்தை பெற்றார்.
    விருதுநகர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் படிப்பை பாதியில் நிறுத்திய அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள சோப்பு கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.

    அப்போது அந்த சிறுமிக்கும் அங்கு வேலை பார்த்த மிஷின் ஆபரேட்டர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    இதையடுத்து அழகுராஜா அந்த சிறுமியை தனது ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கருவுற்றாள். இந்த நிலையில் பிரசவத்துக்காக அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கபட்டார். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது கருவுற்ற சிறுமிக்கு 16 வயது என தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்த அழகுராஜா மீது போக்சோ, குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    • கடலூர் அருகே வளைகாப்பு கோஷ்டி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர். ஆலப்பாக்கம் பகுதியில் சென்ற போது வேனின் டயர் வெடித்தது.

    இதில் தறிகெட்டு ஓடிய அந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் சென்ற தங்கமணி (வயது 35), செல்வி (40), முத்தமிழ் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.
    16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. 

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. #Philippinequake
    மணிலா:

    புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    பூமியின் அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்ட இந்த நிலநடுக்கத்தால் லுஸான் தீவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகள் போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள் அட்டைப்பெட்டிகளைப் போல் சரிந்து விழுந்தன.

    லுஸான் தீவின் போராக் நகரில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 20-க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்று பிரேதங்களும் வெளியே எடுக்கப்பட்டன. இதேபோல், லுபாவ் நகரில் இடிந்து விழுந்த மற்றொரு கட்டிடத்தில் இருந்து ஒரு குழந்தை உள்பட இருவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டதாக பம்பாங்கா மாகாண கவர்னர் லிலியா பினேடா நேற்று மாலை தெரிவித்தார்.

    நிலநடுக்கத்தின் எதிரொலியாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் ஜெனரேட்டர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக்குழுவின் இயக்குனர் ரிக்கார்டோ சாலட் தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கம் சார்ந்த விபத்துகளில் 81 பேர் காயமடைந்ததாகவும், காணாமல்போன 14 பேரை இடிபாடுகளுக்கு இடையில் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். #Philippinequake #Philippinequaketoll 
    புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள வி.ஹெச்.பி. முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா, பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் போட்டியிடவுள்ள 16 தொகுதிகளை இன்று அறிவித்தார். #LSpolls #PravinTogadia #HinduSthanNirmanDal
    லக்னோ:

    வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர்.

    இதற்கிடையே, பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை டெல்லியில் கடந்த மாதம் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.
     
    இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்கிய பிரவீன் தொகாடியா, பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் போட்டியிடவுள்ள 16 தொகுதிகளை இன்று அறிவித்தார். 

    இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், சாண்டவ்லி, அலிகார், கைரானா, பெரோசாபாத், பெரெய்லி, லக்மிபூர் கெரி, உன்னாவ், ஜான்சி, ஹமீர்பூர், பிரதாப்கர், பஸ்தி, லால்கஞ்ச், ஜான்பூர், படோனி மற்றும் சாலம்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். மேலும், குஜராத் மாநிலத்தின் 9 தொகுதிகளிலும், ஒடிஷா மாநிலத்தின் 5 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார். #LSpolls #PravinTogadia #HinduSthanNirmanDal
    மாலியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #MilitaryCampAttack
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், நாட்டின் மத்திய பகுதியில் மோப்டி பிராந்தியத்தில் உள்ள ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

    ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

    அதே சமயம் பயங்கரவாதிகள் பலரும் பலியாகினர். ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.   #Mali #MilitaryCampAttack 
    நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். #NigeriaLassafever
    லாகோஸ்:

    உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல்  கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரைக் கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.

    நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது  26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான  நடவடிக்கைகள் நைஜீரிய சுகாதார அதிகாரிகள்,  உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.

    லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

    இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  #NigeriaLassafever 
    தலைமறைவாக உள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான மும்பையில் உள்ள 16 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #ZakirNaik #ED
    மும்பை:

    வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.
     
    அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

    தற்போது மலேசியாவில் உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய மும்பை மற்றும் புனேவில் உள்ள ஜாகிர் நாயக் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று உத்தரவிட்டது. #ZakirNaik #ED
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். #MilitantsAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜாஸ்ஜான் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantsAttack
    நேபாளம் நாட்டின் டாங் மாவட்டத்தில் கல்வி சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #NepalBusAccident
    காத்மண்டு:

    நேபாளம் நாட்டின் டாங் மாவட்டம், கோராஹி பகுதியில் கிருஷ்ணா சென் இச்சுக் தொழில்நுட்ப பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி சார்பில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சல்யான் மாவட்டத்தில் உள்ள தாவரவியல்
    பூங்காவுக்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, டாங் மாவட்டத்தின் துல்சிபூர் பகுதியில் வரும்போது நிலைதடுமாறிய பஸ் திடீரென அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கல்வி சுற்றுலா சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #NepalBusAccident
    ×