என் மலர்
நீங்கள் தேடியது "18 தொகுதி இடைத்தேர்தல்"
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தக்கார் மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர். 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் 6 பேரும் பயங்கரவாதிகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் இதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #Afghanistantaliban
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு அளித்த விவகாரத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #ElectionCommission
தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கு மாறாக எதிர்த்து ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். இதில் எங்களுக்கு ஒரு நீதி அவருக்கு ஒரு நீதியா? இதை தெளிவுபடுத்ததான் கோர்ட்டுக்கு சென்றோம்.

ஆனால் இப்போது சில அதிகாரிகளிடம் நாங்கள் விசாரித்த போது வேறுவிதமான தகவல்களை சொல்கிறார்கள்.
18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அப்போது எங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி மூலம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காரணம் கேட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாவிட்டால் மாற்று வேட்பாளர்தான் தேர்தலில் நிற்க முடியும். இதனால் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று எடப்பாடி அணியினர் மனக்கணக்கு போடுகிறார்கள்.
இதையும் மீறி தேர்தல் நடந்தால் 10 தொகுதி தேர்தலை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தி விடுவார்கள். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் இடைத்தேர்தலில் நின்றால் எங்கள் மனு தள்ளுபடி ஆகுமா? ஆகாதா? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அவரும் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதற்காக நாங்கள் அனைவரும் சென்னையில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போக வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளனர். அப்பீல் செய்யாவிட்டால் வேறு கட்சிக்கு சிலர் சென்று விடுவார்கள் என்ற பயமும் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பீல் முடிவை தினகரன் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #ByElection #HCMaduraiBench
கம்பைநல்லூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்களை புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்து, பாப்பிரெட்டிப் பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளனர். இதில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியின் விசுவாசிகள், உண்மையான தொண்டர்கள். அ.தி.மு.க.வில் அமைச்சர்களும், கட்சியின் தலைமை கழக கட்டிடம் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் கொதிப்படைந்து உள்ளனர்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அதில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றிப் பெறுவார்கள். இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசீட் கூட கிடைக்காது. 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். ஆனால், உச்ச நீதிமன்றம் சென்றால் தீர்ப்பு வருவதற்கு சுமார் 2 வருடங்கள் ஆகும். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அ.தி.மு.க. ஆட்சிக் காலம் முடிந்து விடும். எனவே, ஒருநாளும் தமிழகத்தில் இந்த மக்கள் விரோத ஆட்சி நீடிக்க கூடாது என்பதற்காகவே, 18 சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்ய வில்லை.
அதேபோல், வரும் 2019-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் உழைக்க வேண்டும். 40-க்கு 40 தொகுதிகளில் நாம் வெற்றிப் பெற வேண்டும் என்பது லட்சியம். அதில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவது நிச்சயம். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதுவரையிலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது. எனவே 18 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் வராது.
அதேசமயம் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் வரலாம்.
பாரதீய ஜனதாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் இல்லை. பாரதீய ஜனதாவுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று ஒரு சில ஊடகங்கள் தான் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றன.
மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க மத்திய ஆட்சியில் மாநில கட்சிகளுக்கு உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாக தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் பரிசீலிப்போம். கூட்டணி அமைத்தோ, தனித்து நின்றோ வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #byelection #admk
அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் ப.தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நீதிபதிகள் 2 பேரும் வழங்கிய தீர்ப்பு மாறுபட்டதாக அமைந்ததால், 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி தனது தீர்ப்பை வழங்கினார்.

இனி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தீர்ப்பு நகலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். விரைவில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsdisqualificationcase #TNElectionCommission
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிக மழையினால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.
அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார்.
அப்போது டி.டி.வி. தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி உள்ளதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை பெங்களூரு செல்கிறோம். நானும் அங்கு செல்கிறேன். அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #TTVDhinakaran #18MLAs