என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "18 injured"
- 90-க்கும் மேற்பட்டோர் 2 பஸ்சில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
- 2 பஸ்களில் வந்த சுமார் 18 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளை யத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 90-க்கும் மேற்பட்டோர் 2 பஸ்சில் ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தியாகதுருகம் அருகே ரீட்டா நகர் பகுதி யில் சென்ற போது, முன்னால் சென்ற பஸ் வேகத்த டையை கடந்த போது பின்னால் வந்த பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 2 பஸ்களில் வந்த சுமார் 18 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தி னர் மீட்டு கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தியாகதுருகம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
- நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
- சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அரியப்பம் பாளையம் நோக்கி மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி நேற்று இரவு புறப்பட்டது.
அப்போது சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் ஜெயசக்தி மேடு என்ற பகுதியில் சென்ற போது ஒரு வளைவில் திரும்ப டிரைவர் திடீர் பிரேக் போட்டார்.
இதில் நிலை தடுமாறிய மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் மினி லாரியில் இருந்த 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுப்பற்றி தெரியவந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.