என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrested for"

    • ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.
    • இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (57). ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குணசேகரன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூ.16,750 வைத்திருந்தார். பின்னர் அந்த பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே 2 வாலிபர்கள் வந்து அமர்ந்தனர்.

    அதில் ஒருவர் நைசாக குணசேகரன் பையில் வைத்திருந்த ரூ.16,750 பணத்தை திருடி அருகில் இருந்த மற்றொரு நபரிடம் கொடுத்தார்.

    திடீரென எழுந்து இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் திருடன்.. திருடன் என அலறினார். அதற்குள் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகராஜ் (35), வெட்டுக்காட்டுவலசு, சங்கரன் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்த குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து குணசேகரிடம் இருந்து திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நாகராஜ் மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நாகராஜ், குமார் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பார்மில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு இங்குமாக திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, வாளவந்தி நாட்டை சேர்ந்த மதியழகன்(40) என்பது தெரிய வந்தது. மதியழகன் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன்களை திருடி வந்தது தெரிய வந்தது.

    அவர் அளித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த சங்கரன் (26) என்பவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து 2 பேரிடம் இருந்து 17 விலை உயர்த்த செல்போன்கள் மீட்கப்பட்டன.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன், சங்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த–ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை அடுத்துள்ள சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக நடந்து வந்த 2 பேரை போலீசார் விசாரித்தனர்.

    விசாரித்ததில் நெரிஞ்சிப்பேட்டை படகு துறை வீதியை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ராக்கி (24) என்பதும், பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    • பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், சீனிவாசனை கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    பு.புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் தனது நண்பருடன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

    இதையடுத்து அவர்கள் சந்துருவிடம் வழி கேட்பது போல் நடித்து சந்துருவின் பாக்கெட்டில் இருந்த ரூ.200-யை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயற்சி செய்தனர்.

    அப்போது அவர் சத்தம் போட்டார். அவரது சத்தத்தை ேகட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை துரத்தி பிடித்தனர். தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் புளியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (22) சீனிவாசன் (25) என தெரிய வந்தது.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.200 மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சத்திரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 780 மதிப்பிலான 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர். அப்போது உதையா மரத்து மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடை பெற்றது தெரியவந்தது.

    உடனடியாக அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாந்தல் பகுதியை சேர்ந்த அன்பரசு (21) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ரூ.1,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • மளிகை கடையில் சோதனையிட்டபோது புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
    • புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குளிங்கரா பகுதியை சேர்ந்தவர் பாபு (53). இவர் தற்போது ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.

    மேலும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் பாபு தனது மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாபுவின் மளிகை கடையில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 10.5 கிலோ எடையிலான ரூ.8,800 மதிப்பிலான புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பாபுவுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்த புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த வேலுசாமி (68) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
    • காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு அருகே லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி (வயது 40), கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரை சேர்ந்த குலாம் முஸ்தபா மொண்டல் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவ ர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    பு.புளியம்படடி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ேபாலீசார் பு.புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பு.புளியம்பட்டி கோவை ேராட்டில் சந்தை ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ெகாண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினி சரக்கு டெம்போ வேன் வந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த சரக்கு வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 45) மற்றும் வேனை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (36) என தெரிய வந்தது. இவர்கள் மது பானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள் 1212 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • பிரவீன்குமார் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபியுல்லா மற்றும் போலீசார் குமலன்குட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் திருமலை தெருவை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடா்ந்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அக்பர் அலி (55) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வேனில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி வழிகாட்டுதல் படி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, தட்டக்கரை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் தட்டக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமாக அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அப்போது வேனில் 50 கிலோ அளவில் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் பவானி, திருவ ள்ளுவர் நகரை சேர்ந்த பாலு (50), உதயகுமார் (55) என்பது தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசியை கர்நாடகா வுக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் ேரஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் பாலு, உதயகுமார் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.வி.சி.ஆர். நகர், அய்யனாரப்பன் கோவில் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தீனா (21), கருங்கல்பாளையத்தை சேர்ந்த முகேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானி போலீசார் ஜம்பை, கோட்டை அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.

    போலீசார் அவரை நிறுத்தி விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முகமத் ஜின்னா என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதேபோல் அதே பகுதி யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் அந்தியூர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (24) என்பதும் கஞ்சா பொட்ட லங்களை கடத்தி விற்ப னைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 2 பேரிடம் இருந்தும் 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்ய ப்பட்டது.

    ×