என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 hours in"

    • பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
    • இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கனமழை பொய்யாவிட்டாலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக பவானி, வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி, சென்னிமலை, பெருந்துறை போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக பவானியில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்னும் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வில்லை. இனி வரும் நாட்களில் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-23, வரட்டுபள்ளம்-7.40, அம்மாபேட்டை-6.60, குண்டேரிபள்ளம்-5.20, பவானிசாகர்-4, கொடி வேரி, சென்னிமலை-2, பெருந்துறை-1. 

    ×