என் மலர்
நீங்கள் தேடியது "2 persons"
- கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.
- அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குமாரபாளையம்:
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுந்தகுமார்(வயது 46), சமையல் தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார். அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீதர்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம், புகளூர், பகுதியை சேர்ந்தவர் முருகன்(24.) மில் ஊழியர். இவர் தற்போது ஆனங்கூர் சாலை, ரங்கனூர் நால் ரோடு, பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அப்பகுதி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சேலம், கோவை புறவழிச் சாலையில் இடது புறமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குமாரபாளையம் அருகே சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா நடுவநேரி பகுதியை சேர்ந்தவர் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.
- இருவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா நடுவநேரி பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ்(வயது 20). தனியார் நிறுவன பணியாளர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே உள்ள பேக்கரி முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் கல்லூரி பகுதியில் இருந்து வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோடியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.