என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "20 percent extra yield"
- நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.
- இவை தொழில் நுட்ப ரீதியாக நிருபித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி – அரக்கன் கோட்டை மற்றும் மேட்டூர் மேற்கு கரை பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு அளவில் சாகுபடி பணிகள் நடக்கிறது. குறிப்பாக அதிக அளவில் நெல் பயிர் நடவுப்பணி நடக்கிறது.
மாவட்டத்தில் கடந்தாண்டு உணவு தானிய சாகுபடி பரப்பு இலக்காக 63,800 ஹெக்டேர் உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.1 லட்சம் டன் என நிர்ணயித்தனர். இந்த இலக்கை எட்டிய நிலையில் செம்பை நெல் சாகுபடி எனும் ஒற்றை நெல் சாகுபடி மூலம் கூடுதல் மகசூலை பெற்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:
நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை மூலம் கூடுதல் மகசூல் பெறலாம். இவை தொழில் நுட்ப ரீதியாக நிருபித்துள்ளனர்.
இந்நுட்பம் மூலம் 3 கிலோ விதை பயன்படுத்தி ஒரு சென்ட் நாற்றங்காலில் நாற்று உற்பத்தி செய்து 15 நாள் வயதுடைய செழிப்பான ஒற்றை நாற்றை போதிய இடை வெளி விட்டு நடலாம்.
இதன் மூலம் விவசாயிகள் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். எனவே விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வலியுறுத்துகிறோம்.
அதனையே வேளாண் துறையும் வலியுறுத்துகிறது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு ஏற்கனவே உள்ளதால் கூடுதல் மகசூல் பெறும் நோக்கில் இம்முறையை கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.