search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "27 kilos plastic bags"

    • நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.
    • நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக மாக பயன்படுத்த ப்படுவ தாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்திக்கு புகார்கள் அதிக அளவில் வந்தன.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறுவுறுத்தலின்பேரில் இன்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் டவுன் பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொ ள்ளப் பட்டது. இதில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மேஸ்திரி முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள் 2 பேட்டரி வாகனங்கள் மூலம் குற்றாலம் ரோடு, சேரன்மகா தேவி ரோடு, வழுக்கோடை பகுதி, தொண்டர் சன்னதி பகுதிகளில் உள்ள சுமார் 36 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் 26 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவது கண்டறிய ப்பட்டது. அவற்றை பறிமு தல் செய்து கடை ஒன்றுக்கு ரூ. 100 வீதம் 26 கடைகளுக்கு ரூ. 2,600 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மொத்தம் 27 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×