என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 people arrested for"
- இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை சாலையில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது போக டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள், உடைந்த இரும்புகள், இரும்பு பெயிண்ட் ட்ரம்கள் குடோனில் வைத்து அதனை பழைய இரும்பு வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா அங்கு பணியாற்றும் காவலாளி ராஜேஷ் என்பவர் மூலமாக கட்டுமான நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்கனவே கொள்முதல் செய்து வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட அலாவுதீன் பாஷா தனது நண்பர்கள் உதவியுடனும், இரவு நேரத்தில் காவலாளி ராஜேஷ் உதவியுடனும் உள்ளே புகுந்து 5 டன் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் சார்பில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கட்டுமான நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா, அகமது பாஷா, சிராஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கட்டுமான நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை திருடி சென்ற சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சரவணன் என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பங்களாபுதூர், அந்தி யூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ப னை செய்து கொண்டிருந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு தெருவை சேர்ந்த அப்புசாமி மகன் குமார் (வயது 54), கோபிசெட்டி பாளையம் கொங்கராபாளையம் பழனிச்சாமி மகன் மகேந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராம நாதபுரம் மாவட்டம் எல்லி முள்ளி பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் சரவணன் (30) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த குட்கா, மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
- கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
பெருந்துறை பங்களா வீதி பவானி சாலை அண்ணா சிலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் வீதியை சேர்ந்த மோகன வசந்த் (22), அதேபகுதியை சேர்ந்த கவுதம் (22) என்பது தெரியவந்தது.
அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஆப்பக்கூடல் புன்னம் செங்கோம்பாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக செதுனாம்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (48) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- வெளி மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனிராவுத்தர் குளம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களை ஏமாற்றி வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சவுந்தர் (24), பெரிய அக்ரஹாரம், கதவணை மின் நிலையம் பகுதியை சேர்ந்த உதயசந்திரன் (63), சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த பாலு (48) ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து எண்கள் எழுத்தப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
- ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி செல்வது தெரிய வந்தது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதி யில் குட்கா மறறும் போதை பொருட்கள் கடத்திச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் புளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக முட்டைக்கோஸ் லோடு ஏற்றி வந்த சரக்கு வாக னத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் முட்டைக்கோஸ் மூட்டை க்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்ததும் அதை கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த போதை பொருட்கள் மற்றும் அதை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த முபீஸ் (20), தாளவாடி பயஸ் பாஷா (30), சத்திய மங்கலம் சஞ்சய் ராஜ் (30) என்பது தெரிய வந்தது.
இவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா உள்ளிட்ட புகை யிலை போதை பொரு ட்களை கர்நாடகா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்த போதை பொருட்களின் மதிப்பு 2.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரி வித்தனர்.
இதையடுத்து போதை பொருட்களை கடத்தி வந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை போலீ சார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை.
- விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அடுத்த சின்னப்பள்ளம் கே.ஆர்.தோட்டத்தில் செந்தில்குமார் ( 52) என்பவர் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டு போர்வெலில் தண்ணீர் எடுப்பதற்காக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மோட்டார் பொருத்தி வைத்துள்ளார். இந்த மின் மோட்டார் கடந்த 13-ந் தேதி பழுது ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அதனை சரி செய்து மீண்டும் பொருத்தி உள்ளார். அதன் பிறகு செந்தில்குமார் சொந்த வேலையாக சென்னை சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என செந்தில்குமாரின் மனைவி அவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக செந்தில்குமார் அங்குள்ள ஒரு மெக்கானிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் மின் மோட்டாரை பழுது பார்க்க அனுப்பியுள்ளார்.
இதையடுத்து மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை. இதுகுறித்து மெக்கானிக் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்த செந்தில்குமார் மின் மோட்டார் இருக்கும் இடத்தில் சென்று பார்த்தார். அங்கு மோட்டார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இத குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் மின்மோட்டார் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் போலீசாரின் விசாரணையில் அதே பகுதி சேர்ந்த ரஞ்சித் குமார் (23), பூனாச்சி அருகே உள்ள முகாசிபுதூர் மனோஜ்( 21) ஆகியோர் மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்கள் 3 பேரும் சேர்ந்து மோட்டார் திருடி அம்மாபேட்டையில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஒரு வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
- அவரை பிடித்து சோதனை செய்தபோது கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பவானி ரோடு நெறிகல்மேடு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.
அவரை பிடித்து சோதனை செய்தபோது அந்த நபர் 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த அர்க்கி என்கிற ஆனந்தகுமார்(35) என தெரிய வந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
இதேபோல் கோபி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளியங்கிரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கடத்தூர் முனிசிபாலிட்டி குப்பை கிடங்கு அருகே சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சாவை சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருப்பதை ஒத்து கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ராமன் (22), மவ்லி ரஞ்சித் (25) என தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
- கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுப்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (54), பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்த ரத்தினசபாபதி (56) ஆகிய 2 பேரும் வெள்ளைத் தாளில் எண்கள் எழுதி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல் அரச்சலூர் அருகே உள்ள தலவுமலை 4 ரோடு பகுதியில் போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அட்டவணை அனுமன் பள்ளி பகுதியை சேர்ந்த லோகநாதன் (26) என்பவரை அரச்சலூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து ரூ.5,410 மதிப்பிலான தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளும்
- லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ் என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன், தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி பாரியூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் போலீசார் ரோந்து சென்று லாட்டரி சீட்டு விற்றதாக வெள்ளாளபாளையத்தை சேர்ந்த காமராஜ்(46) என்பவரை கைது செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள், ரூ.28,400 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பவானி புது பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றதாக எலவமலை வட்டக்கல்சேரியை சேர்ந்த ஜெகதீசன்(32), தொட்டிபாளையத்தை சேர்ந்த பூபாலன்(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்