search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 people were arrested"

    • சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.

    சேலம்:

    பா.ஜனதா ஆட்சியில் ஜி.எஸ்.டி விதிப்பால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர். பாஸ்கர் தலைமை தாங்கி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதில் நிர்வாகிகள் வர்த்தக பிரிவு சுப்பிரமணி, தாரைராஜகணபதி, மாநில செயலாளர் வசந்தம் சரவணன், முன்னாள் தலைவர் மேகநாதன், துணைதலைவர்கள் பச்சப்பட்டி பழனி, கோபிகுமரன், மொட்டையாண்டி, ஷேக் இமாம், பாண்டியன்,சிவக்குமார், ஈஸ்வரி வரதராஜ் மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நட்ராஜ், நாகராஜ், ராமன், ரஞ்சித்குமார், கோவிந்தன், நிசார், இளைஞர் காங்கிரஸ் ரத்தினவேல், அரவிந்த், ராஜ்பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் சுமார் 30 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×