search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 traders were arrested"

    • மதுபாட்டிலுடன் 6 பேர் சிக்கினர்
    • கோவையில் ஒரே நாளில் 30 பேரை கைது செய்து உள்ளனர்.

    கோவை,

    கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடையை மீறி குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு உட்பட்ட இடங்களில் சோதனை செய்தனர்.

    துடியலூர் போலீசார் இடையர்பாளையம், வெள்ளகிணறு, கதிர்நாயக்கன் பாளையம் ஆகிய இடங்களிலும், மதுக்கரை போலீசார் போடிப்பாளையம், கிணத்துக்கடவு போலீசார் தாமரை குளம் மற்றும் வடவள்ளி, தொண்டமுத்தூர், செட்டிப்பாளையம், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், நெகமம், பொள்ளாச்சி, கோட்டூர், மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடைகளில் குட்கா விற்ற வியாபாரிகள் 20 பேரை கைது செய்து அங்கு இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று மாநகர் போலீசார் பெரியகடை வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் சோதனை செய்து 10 பேரை கைது செய்தனர்.மதுபாட்டில்களை பதுக்கி விற்றதாக மாநகர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3150-யை பறிமுதல் செய்தனர்.கோவையில் நேற்று ஒரே நாளில் குட்கா விற்ற 30 பேரும் மது பாட்டில் பதுக்கி விற்ற 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

    ×