என் மலர்
நீங்கள் தேடியது "31 people arrested for gambling"
- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே புலவர்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது.
- தொடர்ந்து சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 31 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே புலவர்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக பரமத்தி போலீசாருக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது புலவர் பாளையத்தை சேர்ந்த லிங்கம் (வயது 48), நாமக்கல் அருகே முதலைப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் சக்கரவர்த்தி (40) ஆகிய இருவரும் சேர்ந்து புலவர்பாளையத்தில் சூதாட்ட கிளப் நீண்ட காலமாக நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 29 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 21 ஆயிரம் மற்றும் 20 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சூதாட்ட கிளப் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 31 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.