என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "37 பயங்கரவாதிகள்"
சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயல்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes #37executed #37terroristsexecuted
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
1902-ம் ஆண்டில் பிரிட்டீஷ் தொல்லியல் ஆராய்ச்சியாளர் அலெக்சான்டரியா, ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டார். அப்போது தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தமிழர்களின் தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தாமிரபரணி ஆற்றுப்படுகை முழுவதும் பரவி இருக்கிறது என்று சான்றுகளுடன் நிரூபித்தார். மேலும் அவரது குறிப்புகளில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 37 இடங்களை அகழாய்வு செய்தால் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் மற்றும் தொன்மையான பொருட்கள், வரலாற்று பொக்கிஷங்கள் கிடைக்கும். குறிப்பாக, ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம், பாளையங்கோட்டை, காயல்பட்டினம், வல்லநாடு, பாலாமடை, கருங்குளம் உள்ளிட்ட 37 இடங்களில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது வரை அங்கு உரிய ஆய்வு நடத்தப்படவில்லை. ஆதிச்சநல்லூரில் 2004-ம் ஆண்டு அலெக்சான்டரியாவின் வரைபடங்கள் மூலம் அகழாய்வு நடந்தது. எனவே தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்பட 37 இடங்களில் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி ஆற்றுப்படுகை உள்ளிட்ட 37 இடங்களில் அகழாய்வு செய்வது குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.#MaduraiHighCourt
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் வனத்துறை அதிகாரி வெங்கட் நரசிம்மன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கலகடா என்ற ஊரில் இருந்து பீலேர் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை வனத்துறை அதிகாரிகள் மறித்தனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், லாரியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது லாரிக்குள் சோதனை நடத்தியதில் 37 பேர் பதுங்கி இருந்தனர்.
மேலும் அவர்களிடம் செம்மரங்களை வெட்டும் உபகரணங்களான 2 ரம்பம், 20 கோடாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களை கைது செய்து பீலேர் வனத்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 37 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து செம்மரம் வெட்ட பயன்படுத்திய ரம்பம், கோடாரி மற்றும் கடத்தி வந்த செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பட்டரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 37 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் நேற்று பிற்பகல் சத்துணவு சாப்பிட்டனர். அப்போது உணவில் பல்லி இறந்து கிடப்பதை 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் பார்த்தார். இது குறித்து தலைமை ஆசிரியர் குமாரிடம் தெரிவித்தார். அவர் மாணவர்கள் யாரும் சத்துணவை சாப்பிட வேண்டாம் என்று கூறினார். அதற்குள் 36 மாணவர்களுக்கும் மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையறிந்த பெற்றோர், அரசு மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் கூறும்போது, சத்துணவு ஊழியர்களின் கவனக் குறைவு காரணமாக பல்லி விழுந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வெம்பாக்கம் தாசில்தார் சுபாஷ்சுந்தர், பள்ளி துணை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
இந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தற்போது நடந்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சத்துணவு செய்யும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. நேற்று அவர்கள் தான் உணவு சமைத்துள்ளனர். இது குறித்து சத்துணவு ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் ஆப்கான் வீரர்களும், நேட்டோ படை வீரர்களும் திணறி வருகிறார்கள்.
இந்தநிலையில் குண்டூஸ் மாகாணத்தின் தாஸ்தி ஆர்ச்சி மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்புபடை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை மூண்டது. விடிய விடிய நீடித்த மோதலில் பாதுகாப்புபடை வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதே போல் ஷஜ்வான் மாகாணத்தின் காம்யாப் மாவட்டத்தில் போலீஸ் படையினருக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் போலீசார் 8 பேர் உயிர் இழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
சமான்கான் மாகாணத்தில் தாரா சுப் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீசார் 14 பேர் பலியாகினர். சாரி புல் மாகாணத்தின் தலைநகர் சாரி புல்லில் உள்ள ராணுவ சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிர் இழந்தனர். அதே சமயம் ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடந்த இந்த தாக்குதல்களில் தலீபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghan #Taliban
சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி (வயது 65) மற்றும் அவரது மருமகன் கஜேந்திரன் (45) உள்பட உறவினர்கள் 5 பேர், கடந்த 9-ந் தேதி போளூர் தண்ணீர்பந்தலில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
போளூருக்கு முன்புள்ள தம்புகொட்டான் பாறை கிராமத்தில் காரை நிறுத்தி வழி கேட்டனர். அப்போது, குழந்தை கடத்தும் கும்பல் என தவறாக எண்ணி கிராம மக்கள் கத்தி கூச்சலிட்டனர். எதற்கு ‘வம்பு’ நின்று காரை எடுத்து கொண்டு புறப்பட்ட அவர்களின் காரை களியம் கிராமத்தில் மடக்கினர்.
காரில் இருந்த ருக்மணி உள்ளிட்ட 5 பேரையும் கீழே இழுத்து போட்டு கொடூரமாக தாக்கினர். காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கஜேந்திரன் உள்பட மற்ற 4 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் அத்திமூர் மற்றும் களியம், தம்புகொட்டான் பாறை, கணேசபுரம், காமாட்சிபுரம், ஜம்பங்கிபுரம், இந்திராநகர், ஏரிக் கொல்லைமேடு, திண்டிவனம் உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த 117 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 42 பேரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து அத்திமூர், களியம் உள்ளிட்ட 11 கிராமங்களையும் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூருக்கு தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட 42 பேரில், 37 பேரின் காவல் முடிந்ததையடுத்து, இன்று போலீஸ் பாதுகாப்புடன் 37 பேரும் போளூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
37 பேரின் காவலையும், மேலும் 15 நாட்களுக்கு நீடித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 37 பேரும் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்