search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 dead"

    • மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.
    • விஜயகுமார் மகன் விவேக்கும் உடன் இருந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (வயது 78). இவர் அதே பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள்கள் பிரசன்னா, பிரகாஷவாணி, திரவியம். மகன்கள் விஜயகுமார், சதானந்தம். பொன்னுரங்கன் மகன்கள் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரைவீரனுடன் திரவியத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் மதுரைவீரனுக்கும் திரவியத்திற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் திரவியம் தனது குழந்தைகளுடன் நத்தாமூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். திரவியத்திற்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவது இருந்து வந்தது. இதனால் திரவியம் மன உளைச்சளில் இருந்தார். நேற்று திரவியத்தின் பெற்றோர் மதுரைவீரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டினுள் திரவியம், மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி, மற்றும் விஜயகுமார் மகன் விவேக்கும் உடன் இருந்தான். வீட்டிற்கு வெளியே மதுரைவீரனுடன், பொன்னுரங்கம், விஜயகுமார் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதில் பதறிஅடித்து கொண்டு உள்ளே சென்ற பொன்னுரங்கம், விஜயகுமார், சதானந்தம் அங்கு தீயில் கருகி எரிந்து கொண்டிருந்த திரவியம் மற்றும் மகள்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அணைக்கமுடியவில்லை.

    இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே திரவியம் மற்றும் அவரது மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரிஆகியோர் உடல் கருகி இறந்தனர். பலத்த படுகாயம் அடைந்த விவேக்கை பொன்னுரங்கம் போராடி மீட்டார். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் விவேக்கை போராடி மீட்ட பொன்னுரங்கம் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுதிணறி இறந்தார். மேலும் வீட்டின் வெளியே வந்த விஜயகுமார் மற்றும் விவேக் புகை மண்டலத்தில் சிக்கி மயங்கி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் வீடு முழுவதும் தீக்கிரையானது. இதை பார்த்த வீட்டின் அருகில் இருந்தவர்கள் அதிர்ந்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்த விவேக் மற்றும் விஜயகுமார், சந்தான ந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயகுமார், விவேக்கை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீ விபத்தில் உயிரிழந்த திரவியம் மற்றும் ரியாஷினி, விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து திரவியம் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதில் இந்த தீ விபத்து நடந்ததா ? அல்லது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்ததா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் திரவியம் கணவர் மதுரைவீரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியனார்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அயோத்தியா பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி இவரது மகன் சேகர் (வயது 38). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வீராணம் அருகே உள்ள சின்னனூர் மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வீராணம் பள்ளி ப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சசிகுமார் (வயது 34) மோட்டார்சைக்கிள் மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.சசிகுமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் செட்டி காடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (32). இவர் பெரிய புதூர் ஏரியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வினோத் குமார் ( 32). இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி வயது 27 என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் மது அதிகமாக குடித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்,உடனடியாக இவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் நடைபெற்ற காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #RussiaGasExplosion
    மாஸ்கோ:

    ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் இன்று திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர். 

    தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #RussiaGasExplosion
    உத்தரபிரதேசத்தில் தற்போது 13 வருடத்திற்கு பிறகு கடுகு எண்ணையால் புது நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
    லக்னோ:

    ‘டிராப்சி’ எனப்படும் நீர்க்கோவை என்ற மர்ம நோய் உத்தரபிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது கலப்படம் செய்யப்பட்ட கடுகு எண்ணையை பயன்படுத்துவோருக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோய் பாதித்தவர்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த நோய் இறுதியாக கடந்த 2005-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் கடுமையாக பரவியது. அதில் 75 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது 13 வருடத்திற்கு பிறகு அங்கு மீண்டும் இந்த நோய் பரவுகிறது. இதற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். ஜனுப்பூர் பகுதியில் அசோக் குமார் (65) என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் 25-ந்தேதி அவரது மனைவிக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் வாந்தி, வயிற்றுப் போக்கும் உண்டானது. இதையடுத்து அவர் மரணம் அடைந்தார். அதே நோய் பாதிப்பால் மே 3-ந்தேதி அவரது மருமகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து 2 மகன்களும் பலியாகினர்.

    தற்போது அசோக்குமாரும் அவரது 4 வயது பேத்தி சுவாதியும் இதே நோய் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் வேகமாக பரவி வருவதால் உத்தரபிரதேச மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். #Uttarpradesh
    ×