search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 killed"

    ஜெய்ப்பூர் அருகே விபத்தில் காயமடைந்தவரை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாயினர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகரை சேர்ந்தவர் பல்ஜித் (28). இவர் இன்று தனது வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. 

    இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பல்ஜித் ஆல்வார் நகரில் இருந்து ஜெய்ப்பூர் நகருக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அந்த ஆம்புலன்சில் காயமடைந்த பல்ஜித் அவரது சகோதரர் பக்சந்த் மற்றும் உறவினர்கள் உள்பட மொத்தம் 6 பேர் பயணம் செய்துள்ளனர்.   

    ஆம்புலன்ஸ் துஷா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி - ஆம்புலன்ஸ் மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் பல்ஜித் அவரது சகோதரர் மற்றும் இரு உறவினர்கள் உள்பட 4 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சேலம் அருகே கந்தம்பட்டியில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தின் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், பாலு, சாதிக் பாஷா, ரகுமத் பாஷா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்தில் பலியானோர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #Tirupur #ToxicGas
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



    அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விசாரணையில், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகியோர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupur #ToxicGas
    சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #China #freighttrainderail
    பெய்ஜிங்:

    சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

    கோங்யி நகர் அருகே சரக்கு ரெயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

    தகவலறிந்து அங்கு வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

    சரக்கு ரெயில் தடம் புரண்டதால அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. #China #freighttrainderail
    ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். #Afghanistan #VolleyballCourt #BombBlast
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணம், டாலோ ஓ பர்பாக் மாவட்டத்தில் உள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை, உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது.

    இந்தப் போட்டியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் போட்டியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. சற்றும் எதிர்பாராதவிதத்தில் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பால் அந்த மைதானமே குலுங்கியது. போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்கள் பதற்றத்துடன் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

    எனினும் இந்த குண்டுவெடிப்பில் உடல் சிதறி 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குண்டுவெடிப்பு நடந்த இடம், தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #Afghanistan #VolleyballCourt #BombBlast 
    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் எரிவாயு கசிவினால் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். #4killed #Parisblast #Parisbakeryblast
    பாரிஸ்:

    பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள 9-வது மாவட்டம் பகுதியில் ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீபிடித்து ஏரிந்தது.

    தகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையினர் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.



    காயமடைந்த சுமார் 50 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #4killed #Parisblast #Parisbakeryblast
    தென் ஆப்பிரிக்காவில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். #SouthAfrica #TrainAccident
    ஜோகனஸ்பெர்க்:

    தென்ஆப்பிரிக்காவில் பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில்கள்
    இயக்கப்பட்டு வருகிறது. 

    பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் இரண்டு ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக இன்று மதியம் சென்று கொண்டிருந்தன. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், முன்னால் சென்று கொண்டிருந்த ரெயில் மீது பின்னால் வேகமாக வந்த ரெயில் மோதியது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    தண்டவாளத்தில் ரெயில்கள் மோதிய விபத்தால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பயணிகள் ரெயில் விபத்து குறித்து அறிந்த தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமோபோசா. விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #SouthAfrica #TrainAccident
    மியான்மர் நாட்டின் மன்டாலே பகுதியில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் டயர் பஞ்சர் ஆகி கார் நிறுத்தத்தின் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். #ambulancecrash #Myanmarambulancecrash
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டின் மன்டாலே பிராந்தியத்திற்குட்பட்ட யாங்கூன்-மன்டாலே பகுதி வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. மைத்தியா நகரை நெருங்கியபோது அந்த ஆம்புலசின் ஒரு டயர் திடீரென்று வெடித்தது.

    இதனால் தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் அருகாமையில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்குள் பாய்ந்து சென்று மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காயமடைந்த இருவர் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #ambulancecrash #Myanmarambulancecrash
    வங்காளதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகினர். #Accident
    டாக்கா:

    வங்காளதேசத்தின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதி அருகே ஷரிஷாடி எனுமிடத்தில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் அமைந்துள்ளது.

    சட்டோகிராமில் இருந்து மியான்மர் நோக்கி செல்லும் நசிராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று மாலை இந்த கிராசிங்கில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது எக்ஸ்பிர்ஸ் ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பய்ணம் செய்த ஒரு குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே வந்தது.

    அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து லாரியுடன் உரசியது. இதில் பேறுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து உகிச்ச்சை அளித்து வருகின்றனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்க்டமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Accident
    பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த பலத்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Philippines #Landslide
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில், இந்த ஆண்டின் மிக வலுவான புயல் என்று சொல்லப்படக்கூடிய ‘மங்குட்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து பிலிப்பைன்ஸ் இன்னும் மீளவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள செபு தீவில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் தரை மட்டமாகின.



    இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    இதுபற்றி அந்தப் பிராந்திய போலீஸ் அதிகாரி டிபோல்டு சினாஸ், நிருபர்களிடம் பேசும்போது, “நிலச்சரிவு காரணமாக, சுண்ணாம்பு குவாரி பகுதியில் அமைந்திருந்த 20 முதல் 24 வீடுகள் வரை மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன. வீடுகளில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்” என்றார்.

    நாகா நகரத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகையும், ஓலமும் தங்களுக்கு கேட்டதாக மீட்பு படையினர் கூறினர்.

    நாகா நகர கவுன்சிலர் கார்மேலிங் குரூஸ், தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ நிலச்சரிவில் 50 முதல் 80 பேர் வரை சிக்கி இருக்கக்கூடும் என கருதுகிறோம். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது” என்று கூறினார்.

    நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பால் நாகா நகரம் சோகத்தில் மூழ்கி உள்ளது. #Philippines #Landslide  
    மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். #MexicoFiring
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோவில் உள்ள கரிபால்டி சுற்றுலா தலத்தில் ஏராளமானோர் நேற்று திரண்டிருந்தனர். அங்கு வார விடுமுறையை உற்சாகமாக கழித்துக் கொண்டிருந்தனர்.
     
    அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் பைக்கில் வந்தது. அவர்கள் இசைக்கலைஞர்கள் போன்று வேடமணிந்திருந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்துக்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #MexicoFiring
    ×