search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "44th Chess Olympiad"

    • 187 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
    • 21 வட்டாரங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் ப்பள்ளியில் கடந்த 20-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் வருகின்ற வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 187 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் வீடுகள் தோறும் இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை அமைச்சர் கே.என்.நேரு கடந்த 15-ந்தேதி சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள 21 வட்டாரங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்கப் போட்டிகள் சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 20-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.வட்டார அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் பிரிவுகள் வாரியாக சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 126 மாணவ, மாணவியர்களும், அரசு உயர் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 126 மாணவ, மாணவியர்களும், அரசு மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 126 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 378 மாணவ, மாணவியர்கள் முதல் 3 இடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் சேலம், அழகாபுரம் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்தது. போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் 2 இடங்களை பெறக்கூடிய 6 முதல் 8-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் 5 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பர். இம்முகாமில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெறும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு , 11 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு சென்னை செல்கின்றனர்.நிகழ்ச்சியில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பள்ளி முதல்வர் சகாயராஜ், செயலாளர் அருளப்பன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

    ×