search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5-Date revision"

    • சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • சென்னிமலையில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 10 –-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது

    சென்னிமலை,

    சென்னிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத் தேர் திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சென்னிமலை மலைக்கு மேல் உள்ள சுப்பிரமணிய சாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர் பெருவிழா 15 நாட்கள் நடக்கும். பழனி முருகன் கோவிலில் எப்படி பங்குனி உத்திர தேர்திருவிழா சிறப்போ அதே போல் ஆதி பழனி என அழைக்கப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் தை பூச தேர்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    வருகிற 27-ந் தேதி காலை கணபதி ஹோமமும், இரவு கிராமசாந்தியும் நடக்கிறது. 28-ந் தேதி சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. இரவு பல்லக்கு சேவையும், 29-ந் தேதி இரவு பல்லக்கு சேவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், பிப். 1 -ந் இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது.

    2-ந் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது. 3– -ந் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும், நடக்கிறது. 4-ந் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது.

    5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை 6.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    6-ந் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 7–-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், 8–-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7 தெப்போற்சவமும், பூத வாகன காட்சியும் நடக்கிறது.

    9 –-ந் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை வள்ளி தெய்வானை சமதே முத்து குமாரசாமிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு மகாதரிசனம் அன்று நடராஜப் பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய சாமி வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும், பஞ்சமூர்த்தி திருவீதி உலா அதிகாலை 5 மணி வரை நடக்கிறது.

    அன்று சென்னிமலையில் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 10 –-ந் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் அன்னகொடி, கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், அலுவலர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×