என் மலர்
நீங்கள் தேடியது "5 robbers"
- விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது28). இவர் சம்பவத்தன்று சிறுகுளம் கண்மாய் பகுதியில் சென்றார். அப்போது அங்கு வந்த பராசக்தி நகரை சேர்ந்த குருசங்கர் (எ) குண்டு காளி (37) என்பவர் அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் குண்டு காளியை கைது செய்தனர்.
சிவகாசி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் பள்ளப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது லிங்கபுரம் காலனியை சேர்ந்த விசால் முருகன் (31), நேரு காலனி சோனு குமார் (31) ஆகியோர் வாளால் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). பட்டாசு தொழிலாளியான இவர் நாரணாபுரம் ரோட்டில் சென்ற போது சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (36), முனீஸ்வரன் (21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.