search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 rupee note"

    • போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
    • பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது.

    அந்த படத்தில் ரமேஷ் சந்திர சஹானியின் மனைவி மற்றும் குழந்தைகள் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போஸ் கொடுத்தவாறு இருந்தனர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் பணம் என்று தெரிவித்தார்.

    மேலும், அவர் தன்னை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அந்த படம் கடந்த 2021 நவம்பர் மாதம் 14-ந்தேதி எடுக்கப்பட்டது என்றும், அது முறைகேடாக சம்பாதித்த பணம் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும் பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    விசாரணை நிறைவில் போலீஸ் அதிகாரியான ரமேஷ் சந்திர சஹானி காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ்காரரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நோட்டு மூட்டைகளுடன் உள்ளனர்.

    இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண் டுள்ளோம், அந்த போலீஸ் காரர் காவல் துறையின் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை.
    • 2024-ம் நிதியாண்டில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதம் இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.

    ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன.

    பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் பிற்பகுதியில் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பணவீக்க எதிர்பார்ப்பு களை உறுதியாக நிலை நிறுத்துவதற்கு நிதி கொள்கை குழு கொள்கை நடவடிக்கைகளை உடனடியாகவும், சரியானதாகவும் தொடர்ந்து எடுக்கும். நிதி கொள்கை குழுவின் நடவடிக்கைகள் விரும்பி முடிவுகளை தருகின்றன.

    வளர்ச்சிக்கு உள்நாட்டு தேவை நிலை ஆதரவாக உள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2024-ம் நிதியாண்டில் 6.5 சதவீத வளர்ச்சியை ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. 2024-ம் நிதியாண்டில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதம் இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

    பொருளாதாரத்தில் உற்பத்தி தேவைகளுக்கு போதுமான ஆதாரங்கள் உறுதி செய்யப்படும். மேலும் பணப்புழக்கம் மேலாண்மையில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்படும்.

    விலை மற்றும் நிதி ஸ்திரத் தன்மைக்கு ஏற்படும் அபாயங்களை கையாள்வதில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படும். இந்த ஆண்டு ஜூலை முதல் இந்திய ரூபாய் மதிப்பு நிலையானதாக இருந்து வருகிறது.

    வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. ரூ.1.80 லட்சம் கோடி வந்துள்ளது. இதில் 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டதாகும்.

    ரூ.500 நோட்டுகளை திரும்ப பெறும் எண்ணம் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதேபோல ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. யூகங்களை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் தான்.
    • சிறுவர்கள் விரும்பும் நொறுக்கு தீனிகளில் ‘சிப்ஸ்’ பாக்கெட்டும் ஒன்று.

    பெங்களூரு :

    குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் உள்பட பலருக்கும் நொறுக்கு தீனி சாப்பிடுவது என்றால் அலாதி பிரியம் தான். பெற்றோருடன் வெளியே செல்லும் குழந்தைகள் செல்லும் வழியில் பார்க்கும் கடைகளில் பல வண்ண நிறங்களில் பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கவிடப்பட்டு இருக்கும் நொறுக்கு தீனி அடம்பிடித்து கேட்டு வாங்கி ருசித்து வருகிறார்கள். சிறுவர்கள் விரும்பும் நொறுக்கு தீனிகளில் 'சிப்ஸ்' பாக்கெட்டும் ஒன்று. இந்த நிலையில் குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் கடை, கடையாக சென்று 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை முண்டி அடித்து கொண்டு வாங்கும் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

    அதாவது ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா உன்னூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக 'சிப்ஸ்' பாக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அந்த கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் தின்பண்டங்களுடன் சேர்த்து 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தான் காரணம்.

    சுமார் 5 நிறுவனங்களின் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இதுபோன்று 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைகளுக்கு சென்று அந்த 5 நிறுவனங்களின் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை வாங்க போட்டா போட்டி போட்டனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை வாங்கியதில் சுமார் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாக அந்த கிராமத்தினர் கூறுகின்றனர்.

    மேலும், கடைகளில் இருந்த அனைத்து 'சிப்ஸ்' பாக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இதையடுத்து மீண்டும் கடைகளுக்கு விற்பனைக்கு வந்த 'சிப்ஸ்' பாக்கெட்டுகளை மக்கள் முண்டியடித்து வாங்கினர். ஆனால் அவற்றில் எந்த பணமும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும், தங்களது நிறுவன சிப்ஸ்களை பிரபலப்படுத்த அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை பரிசாக வைத்திருக்கலாம் என்றும், 'சிப்ஸ்' பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அசலா? அல்லது போலியா? என்ற சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்த 'சிப்ஸ்' பாக்கெட் விவகாரம் அப்பகுதி மக்கள் மத்தியில் ருசிகர விவாதமாகவும், பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என்றால் மிகையல்ல.

    ×