என் மலர்
நீங்கள் தேடியது "6 people arrested for"
- ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
- 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ப னை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று ஒரே நாளில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், பெருந்துறை, தாளவாடி, சத்திய மங்கலம், பவானி போன்ற பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்த அனுமதி கொடுத்ததற்காகவும்,
அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டதாகவும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர்.