என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 7 arrest
நீங்கள் தேடியது "7 arrest"
ராசிபுரம் அருகே கத்தி முனையில் ஓட்டுநரை மிரட்டி முந்திரி ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மகன் ஜெயசிங் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில், லாரி ஒன்றில் ரூ1.10 கோடி மதிப்பிலான 12 டன் எடை கொண்ட முந்திரி லோடு ஏற்றி கொண்டு ஜப்பான் நாட்டிற்கு செல்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், லாரி டிரைவரை , மிரட்டி லாரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், லாரியை போலீசார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதனை தெரிந்து கொண்ட அந்தக் கும்பல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மேட்டுக்காடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் லாரியை கைப்பற்றிய போலீசார், நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங், உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
திருச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி சிலை அருகே நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநிலத்தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே போராட்டம் நடத்த வந்தவர்களிடம் அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது, மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இருப்பினும் அக்கட்சி நிர்வாகிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உருவபொம்மையை பறிக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்து மகா சபா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து,அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் இரு இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்த வழக்கில் 7 பேரை கைது செய்துள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். #ImranKha #forcedconversion #forcedmarriage #teenageHindugirls
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர்.
பின்னர், ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.
இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோட்கி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஞ்சாப் மாகாணம் ரகிம் யார்கான் மாவட்டத்தில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சிறுமிகளை கடத்தி திருமணம் செய்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர். #ImranKha #forcedconversion #forcedmarriage #teenageHindugirls
இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 7 பேரை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 7 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் அனைவரும் உடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 870 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 29 லட்சம் ஆகும்.
தங்கம் கடத்தி வந்த 7 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் 4 பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 3 பேரும் சென்னை வாலிபர்கள். அவர்கள் குருவியாக செயல்பட்டு தங்கம் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
தங்கம் கடத்தலில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யாருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport

×

X