search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7-Date"

    • முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு மனுநீதி நாள் முகாம் 7-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
    • மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    மதுரை

    மதுரையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் நேரில் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கைக்கு கலெக்டர் ஆவண செய்வார். இதனால் திங்கட்கிழமை நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பார்கள்.

    இந்தநிலையில் ''கள ஆய்வில் முதல்-அமைச்சர்'' என்ற திட்டத்தின் கீழ் வருகிற 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வு செய்கிறார். அதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் நிர்வாக பணிகள், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும், செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்தும் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் 6-ந்தேதி திங்கட்கிழமை ஆகும். அன்றைய தினம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோ சனை நடத்த உள்ளார்.

    எனவே கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடத்தப்படும் மனு நீதி நாள் முகாம் வருகிற 6-ந்தேதி வழக்கம்போல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் 6-ந்தேதி நடக்கவிருந்த மனுநீதிநாள் முகாம் மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 6-ந்தேதி நடப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம், அடுத்த நாள் (7-ந்தேதி) நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    ×