search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 people"

    • 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணி க்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 4 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள னர். தற்போது மாவட்டம் முழுவதும் 31 பேர் கொரோனா பாதிப்பு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 76 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் வெளியே செல்லு ம்போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண்கள் உள்பட ஒரே நாளில் 7 பேர் மாயமாகினர்.
    • ஒரே நாளில் மாயமான 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    போடி குலாளர் பாளையம் தண்ணீர் தொட்டி அருகே வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மனைவி கவுசல்யா (வயது 22). இவர்களுக்கு ரக்‌ஷிதரன் என்ற 8 மாத கைக்குழந்தை உள்ளது. ராஜேஷ் கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது ைகக்குழந்தையுடன் வெளியே சென்ற கவுசல்யா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் நேருநகர் ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த புகழேந்திரன் மகள் அகிலா (வயது 21). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலா மாயமானார். இது குறித்து அவரது தாய் மகேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகே உள்ள மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் ஆர்த்தி (21). இவருக்கு திருமணமாகி தற்போது மகப்பேறுக்காக தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார்.

    இது குறித்து அவரது தாய் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்த கர்ணன் மகள் அபி (16). 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மாயமானார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் பூலன்தெருவைச் சேர்ந்த ஜெயபாஸ்கரன் மகன் பிரதீப் (42). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சொந்த ஊருக்கு சென்று விட்டு தூத்துக்குடி செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்ல வில்லை என தெரிய வந்தது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டி 2வது வார்டு கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (45). இவர் சம்பவத்தன்று தனது மாடுகளுக்கு புல் அறுத்து கொண்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது மனைவி செல்வி ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×