என் மலர்
நீங்கள் தேடியது "74 houses"
- ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
- ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.
சங்ககிரி:
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சி மன்றங்களில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2021–22 நிதியாண்டில், ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரும், உட்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலருமான நக்கீரன் தலைமையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ .முத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ,பணி மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அங்கு பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முதல் கட்டமாக கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், 10 வீடுகள் கட்ட அளவீடுகள் செய்து பணிகளை தொடங்கினர்.