search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 polling"

    • ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 2 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி மற்றும் 14 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. 16 பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 3 மனுக்கள் தள்ளுபடியானது. மீதமுள்ள 39 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இதில் அந்தியூர் யூனியன் குப்பாண்டம்பாளையம் பஞ்சாயத்து வார்டு–4, நம்பியூர் யூனியன் கெட்டிசெவியூர் பஞ்சாயத்து வார்டு எண்–10, பொலவபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–5, பெருந்துறை யூனியன் கருக்குபாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–6, சத்தியமங்கலம் யூனியன் உக்கரம் பஞ்சாயத்து வார்டு எண்–4, டி.என்.பாளையம் யூனியன் பெருமுகை பஞ்சாயத்து வார்டு எண்–11, கணக்கம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–1, புளியம்பட்டி பஞ்சாயத்து வார்டு எண்–3, தாளவாடி யூனியன் தலமலை பஞ்சாயத்து வார்டு எண்–2 என 9 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இது தவிர அம்மாபேட்டை யூனியன் சிங்கம்பேட்டை பஞ்சாயத்து வார்டு எண்–2ல் இருவர், பவானி யூனியன் பெரியபுலியூர் பஞ்சாயத்து வார்டு எண்–3 ல் 4 பேர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் இருவர், கோபி யூனியன் கோட்டுபுள்ளாம்பாளையம் பஞ்சாயத்து, வார்டு எண்–1ல் இருவர், மொடக்குறிச்சி யூனியன் 46புதூர் பஞ்சாயத்து வார்டு எண்–1ல் நால்வர், அத்தாணி டவுன் பஞ்சாயத்து வார்டு எண்–3ல் மூவர், அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்து, வார்டு எண்–2ல் மூவர் என, 7 பதவிக்கு அ.தி.மு.க, தி.மு.க. சுயேட்சை என 20 பேர் போட்டியில் உள்ளனர்.

    இந்த 7 பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிங்கம்பேட்டை ஊராட்சி யில் ஒரு வாக்குச்சாவடி மையம், பெரிய புலியூரில் ஒரு வாக்குச்சாவடி மையம், தொப்பம்பாளையத்தில் ஒரு வாக்கு சாவடி மையம், கோட்டு புள்ளாபாளையத்தில் ஒரு வாக்குச்சாவடி மையம், 46 புதூரில் இரண்டு வாக்குச்சாவடி மையம், அத்தாணி பேரூராட்சியில் ஒரு வாக்கு சாவடி மையம், அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடி மையம் என 8 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஒரு வாக்குச்சாவடி மையத்தில் தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், அவருக்கு உதவியாக இரண்டு ஓட்டு பதிவு அலுவலர், மற்றும் பிற பணியாளர்கள் என 6 பேர் இருந்தனர். காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

    பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்து வாக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒரு சில பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தார்கள். அவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

    இதேபோல் வாக்குப்பதிவு நுழைவு வாயிலில் சானிடைசர்கள் கையில் தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சிரமம் இன்றி வாக்களிக்க பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வெயில் காரணமாக சாமியான பந்தலும் போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. பூத் சிலிப் வழங்கப்பட்டது. முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5 ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறையில் பொதுமக்கள் வாக்களித்தனர்.

    அத்தாணி, அம்மா–பேட்டை பேரூராட்சிகளில் மின்னணு வாக்கு பதிவு பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

    தேர்தலை ஒட்டி ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 24 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வசதியாக இந்த பகுதியைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், அரசு அரசு சார்ந்த நிறுவ–னங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

    ×